ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில் தொடங்க ஆலோசனை, நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஃபேன்ஸி நகைகள் செய்யத் தேவையான பொருட்கள் கிடைக்கும் தமிழக ஊர்கள்!

ஃபேஷன் ஜுவல் செய்யத் தேவையான பொருட்கள் எங்கே கிடைக்கும் என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி இது. சென்னையில் பாரிமுனை பூக்கடை காவல் நிலையத்திற்கு பின்புறம் கோல்டு கவரிங் நகைகள் விற்கும் கடைகள், பேன்ஸி பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகளைத் தாண்டி வந்தால் பெருமாள் முதலி தெரு வரும். அந்தத் தெரு முழுக்க ஃபேஷன் ஜுவல்லரி தொடர்பான மணிகள், செட்கள் எல்லாம் கிடைக்கும். சேலத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் ஏரியாவிலும் புதிய… Continue reading ஃபேன்ஸி நகைகள் செய்யத் தேவையான பொருட்கள் கிடைக்கும் தமிழக ஊர்கள்!

ஃபேஷன் ஜுவல்லரி, கோரல் பென்டன்ட் செட், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு

புடவைக்கு மேட்சாகும் கோரல் பென்டன்ட் செட் உருவாக்குவது எப்படி?

ஃபேஷன் ஜுவல்லரி - கற்றுத் தருகிறார் கீதா ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் ஆரம்ப நாட்களில் எளிமையான டிசைன்களை செய்து பார்த்து பழகலாம். சிம்பிளான கோரல் பென்டன்ட் செட் உருவாக்குவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். புடவை, எத்னிக்கான சல்வாருடன் இதை அணியலாம். சரி.. செய்முறைக்குப் போவோமா?   இந்த செய்முறையை விடியோவில் காண… Continue reading புடவைக்கு மேட்சாகும் கோரல் பென்டன்ட் செட் உருவாக்குவது எப்படி?

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், புகைப்படங்கள், ஹேங்கிங் தோடுகள்

நீங்களும் செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி!

  ஹேங்கிங் தோடுகள்...பார்க்க மிக எளிமையான இந்த தோடுகளை செய்வதும் எளிமைதான். கடைகளில் ரூ. 100க்கு மேல் விலை வைத்து விற்கப்படும் இவற்றை குறைந்த செலவிலேயே செய்துவிடலாம். இதற்கு தேவையான பொருட்கள் ஹூக்குகள், மாட்டுவதற்கான வளையங்கள் இணைக்கப்பட்ட வகை வகையான தோடுகள். எப்படி செய்வது? ஹூக்குகளில் உள்ள வட்ட வடிவ இணைப்பானை சற்றே தளர்த்திவிட்டு, தோடுகளில் உள்ள வளையங்களை கோர்த்துவிட்டால் தோடுகள் அணிந்துகொள்ள தயார்.