எழுத்தாளர்கள், கரிப்பு மணிகள்

கரிப்பு மணிகள்-2

தொடர்கதை ராஜம் கிருஷ்ணன் 2 மருதாம்பா வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விடமாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிபட்டுப் பட்டினி கிடந்து நோவும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும்  எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு  என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்டபோதும் அவள் விம்மி அழவில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே… Continue reading கரிப்பு மணிகள்-2

இன்றைய முதன்மை செய்திகள், சினிமா

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

வரலாற்று நாவல்களில் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' கதைக்கு நட்சத்திர தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இவ்வளவு செல்வாக்கு பெற்ற அந்தப்படைப்பை அடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியாக 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படமாகிறது. இரண்டரை மணிநேரம் ஓடக் கூடிய படமாக இது உருவாக இருக்கிறது. இதை தயாரிக்க இருப்பவர் பொ. சரவணராஜா. அவரைச் சந்தித்த போது ... இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை… Continue reading கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படமாகிறது!

அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு, பெண் எழுத்தாளர், பெண்ணியம்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Continue reading எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது

ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெண் எழுத்தாளர்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுவழங்கிவருகிறது. இதன்வழி 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு பெறுபவர் அ. வெண்ணிலா நூல்: பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் கே. பி. பாலச்சந்தர் நினைவு நாவலுக்கான பரிசு பெறுபவர் இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா பெய்யீத் படைப்பு உம்மத். அமரர் செல்வன் கார்க்கி நினைவு கவிதை நூலுக்கான பரிசுபெறுபவர் இரா. விநோத்- படைப்பு: தோட்டக்காட்டீ… Continue reading தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்