அரசியல், சினிமா, Uncategorized

லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

இந்தியாவின் முதல் இந்துத்துவ பிரதமரான நரேந்திர மோடி கடந்த ஓராண்டில் ஏராளமான வெளிநாட்டுப் பயணங்களையும் ஏராளமான இந்துத்துவ மீட்பு செயல்பாடுகளையும் மேற்கொண்டார். இதன்மூலம் தனது கார்ப்பரேட் இந்துத்துவ சகாக்களுக்கு முதல் ஆண்டிலேயே நம்பிக்கையை ஊட்டி இருக்கிறார். மற்றொருவகையில் தங்களை துயரங்களிலிருந்து மீட்டெடுப்பார் என வாக்களித்த பெரும்பான்மை மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள் என்றும் சொல்லலாம். இந்தி சமஸ்கிருத திணிப்பு, வரலாறை திரிப்பது, மாட்டிறைச்சி தடை, தேவாலயங்கள் மீது தாக்குதல் இந்த வரிசையில் குலத் தொழிலை ஊக்குவிக்கும் குழந்தைத்… Continue reading லட்சுமி மேனன்கள் ஏன் குழந்தை தொழிலாளிகளாக கருதப்படுவதில்லை?

அரசியல், உலகம்

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை? மோடியிடம் கேட்ட ஜப்பான் மாணவர்கள்

 ஜப்பானில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, டோக்கியோவில் உள்ள சேக்ரெட் ஹார்ட் பல்கலைக்கழக மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவர், மோடியிடம் ‘ஏன் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை? என்று கேட்டார், அதற்கு பதிலளித்த மோடி, "இந்தியா புத்தர் அவதரித்த பூமியாகும். அமைதிக்காக வாழ்ந்த அவர், அதற்காகத் தன்னையே வருத்திக்கொண்டார். அவரது போதனை இந்தியா முழுவதும் பரவியுள்ளது'' என்றார். அப்படியானால், ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ள… Continue reading அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை? மோடியிடம் கேட்ட ஜப்பான் மாணவர்கள்

அரசியல், உலகம்

பசுபதிநாதர் கோயிலுக்கு 2,500 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்கினார் நரேந்திர மோடி

காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு 2,500 கிலோ இந்திய சந்தனக் கட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி தானமாக வழங்கியுள்ளார். அரசு முறைப் பயணமாக நேற்று நேபாளம் சென்ற நரேந்திர மோடி ருத்ராட்ச மாலை அணிந்து, இன்று காலை காத்மாண்டுவில் உள்ள புகழ்பெற்ற பசுபதி நாதர் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்தார். பிறகு, இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 2,500 கிலோ எடையுள்ள சுத்தமான சந்தனக் கட்டைகளை கோயிலுக்கு மோடி தானமாக வழங்கினார். கோயிலில் உள்ள சிவலிங்கத்துக்கு… Continue reading பசுபதிநாதர் கோயிலுக்கு 2,500 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்கினார் நரேந்திர மோடி

அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவிற்கு மீறி டீசல் வாங்கி குவிக்கப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு... ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு பரிசோதனைகளுக்காக ஒரு மாதம் மூடப்பட்டிருப்பதாகவும், ஒரு மாதத்தில் வர்த்தக ரீதியிலான உற்பத்தித் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தார் டீசலை வாங்கித் தீர்க்கிறார்கள். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்: நாள்                       டீசல் அளவு (லிட்டர்)     ரூபாய் மதிப்பு              டீசல் விற்ற நிறுவனம் மே 26, 2014        ஒரு லட்சம்                           55,72,160                           இ… Continue reading கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

வாரணாசி வெற்றி: மோடிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட்டவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அஜய் ராய், வாரணாசி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்துகொண்ட மோடியின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று அலாகாபாத் உயர்நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் அந்த மனுவில் மக்களவைத் தேர்தலின்போது, வாரணாசி தொகுதியில் மோடி தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது மனைவி யசோதா பென்னின் வருமானம், பான் கார்டு ஆகிய விவரங்களை பூர்த்தி செய்யவில்லை. இது உச்ச நீதிமன்ற வழிகாட்டு… Continue reading வாரணாசி வெற்றி: மோடிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்