சினிமா, விஜய் தொலைக்காட்சி, விருது

நட்சத்திரங்கள் திரளும் விஜய் டிவியின் விருது விழா!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கமல் ஹாசன், விஜய், சூர்யா, நயன் தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என திரையுலக நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கின்றனர். இந்த நிகழ்வில் சூர்யா நடிக்கும் அஞ்சான் படத்தின் ட்ரெய்லர் வெளியீடப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள் கோபிநாத்தும் தேவதர்ஷிணியும்.

சினிமா

ஜெயம் ரவியுடன் இணையும் நயன்தாரா!

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவியுடன் இணைகிறார் நயன் தாரா. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.