எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களும் பின்னலாம் குரோஷா!

  காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை! அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று… Continue reading நீங்களும் பின்னலாம் குரோஷா!

செய்து பாருங்கள், தையல் கலை

தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி?

தையல் கலையில் நிறைய பேருக்கு ஆர்வம் இருக்கும் நேரமின்மை காரணமாக வீட்டிலிருக்கும் தையல் இயந்திரம் துருப்பிடிக்க ஆரம்பிக்கும் அன்றாட வேலைகளில் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கினாலே வீட்டுக்குத் தேவையான துணிகளை நாமே தைத்துக் கொள்ள முடியும்.  வேலைக்குச் செல்பவர்கள் ஓய்வுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கலாம். அலுவல் வேலைகளிலிருந்து மாற்றுக்கு இதை முயற்சிக்கலாம். எல்லாம் சரி தையல் தெரியாது என்பவர்கள், கவலை கொள்ளத் தேவையில்லை. தையல் ஒன்றும் அவ்வளவு கடினமான வேலை இல்லை. கற்பது எளிது. இப்போது ரூ. 4000லிருந்து மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள்… Continue reading தையல் கலை: குஷன் கவர் தைப்பது எப்படி?

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், தையல் கலை

வீட்டுக்குத் தேவையான தலையணைகள் நீங்களே செய்யலாம்: படங்களுடன் எளிய செய்முறை

வீட்டுக்குத் தேவையானப் பொருட்கள் தயாரிப்பதற்கான எளிய தையல் முறைகள் பற்றி பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் தலையணைகள் உருவாக்குவதைப் பார்ப்போம். கடைகளில் விற்கும் தலையணைகளைப் போல அதே நேர்த்தியோடு,குறைந்த செலவில் தலையணைகளை உருவாக்க முடியும். தேவையானவை: பஞ்சு (பஞ்சு பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். தூய்மையான பருத்தி பஞ்சு தலையணை வேண்டும் என்று நினைப்பவர்கள். பருத்தி பஞ்சை காதி கடைகளில் வாங்கியும் தலையணை தைக்கலாம்.) மெல்லிய பருத்தி துணி (நாங்கள் பயன்படுத்தியிருப்பது வீட்டில்… Continue reading வீட்டுக்குத் தேவையான தலையணைகள் நீங்களே செய்யலாம்: படங்களுடன் எளிய செய்முறை

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, செய்து பாருங்கள்

எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

சங்கிலித் தையலை எந்த விதமான டிசைனுக்கும் இந்தத் தையலைப் போடலாம். அதேபோல எந்த விதமான ஆடைகளிலும் இதைப் பயன்படுத்தலாம். தேவையானவை: காட்டன் துணி, ஊசி, எம்பிராய்டரி நூல், எம்பிராய்டரி சட்டகம். துணியை எம்பிராய்டரி சட்டகத்துக்குள் பொருத்தவும். ஊசியில் இரட்டை இழையாக நூலைக் கோர்த்துக் கொள்ளுங்கள். டிசைனின் ஆரம்பப் புள்ளியில் ஊசியைக் கீழிருந்து குத்தி மேலே இழுத்துக் கொள்ளுங்கள். மேலிழுத்த நூலை இடது கைப் பெருவிரலால் துணியோடு அழுத்திப் பிடித்தவாறே, முதலில் ஆரம்பித்த புள்ளியிலேயே மீண்டும் ஊசியைக் குத்தி, அதே வரிசையிலேயே சிறிது… Continue reading எம்பிராய்டரி : சங்கிலித் தையல் போடுவது எப்படி?

எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, தையல் கலை, பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!

எம்பிராய்டரி போடுவோம் - 1 ஓட்டுத்தையல்(Running stich) மனிதர்கள் நாகரிகமாக உடையணிய ஆரம்பித்தபோது தையல் கலை தோன்றியது. அதாவது இலைகளையும் தழைகளையும் மரப்பட்டைகளையும் கோர்த்து உடைகள் தயாரித்தபோது முதல் தையல் கலைஞன் தோன்றியிருக்கக்கூடும். மிக மிக பழமையான இந்தத் தையல் கலையில் இப்போது எவ்வளவோ மாற்றங்கள். ஆனாலும் கையால் தைக்கப்படும் தையலுக்கு இப்போதும் தனி மகத்துவம் உண்டு. இப்படியோரு மகத்துவமான தையல் கலையில் உள்ள ஏராளமான தையல் வகைகள் பற்றி அறிவதோடு, அதைக் கற்கவும் போகிறோம். எம்பிராய்டரி… Continue reading எம்பிராய்டரி போடுவோம்: ஓட்டுத் தையலில் ஒரு பூ!