அரசியல், இந்தியா

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை!

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும், வாக்காளர்களுக்குப் பணம், மது, வீட்டு உபயோகப் பொருள்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது குறித்து தேர்தல்… Continue reading வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை!

அரசியல், இந்தியா

ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பாஜக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹரியாணாவில் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ‘ஹரியாணாவை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் அரசால் மிகவும் மோசமான நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கும், டி.எல்.எஃப். நிறுவனத்துக்கும் இடையேயான நில பேரத்துக்கு ஹூடா… Continue reading ராபர்ட் வதேரா நில பேரத்துக்கு ஹரியாணா அரசு ஒப்புதல் அளித்த விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க மோடி வலியுறுத்தல்

அரசியல், தமிழ்நாடு, Uncategorized

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு இடைத் தேர்தல்: தேதி அறிவிப்பு

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள ஆயிரத்து 111 பதவிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 29-ஆம் தேதி தாக்கல் செய்யலாம். வேட்பாளர் பட்டியல் மாலை 6 மணிக்கு வெளியிடப்படும். வேட்புமனுக்களை வரும் 30-ஆம் தேதி திரும்பப் பெறலாம். வாக்குப் பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறும். பதிவான வாக்குகளை எண்ணும் பணி, அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெறும். தலைவர், துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 11-ஆம் தேதி நடத்தப்படும் என்று… Continue reading கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள பதவிகளுக்கு இடைத் தேர்தல்: தேதி அறிவிப்பு

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம்

குறைந்தபட்ச நேர்மையை கடைபிடியுங்கள் : ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

குறைந்தபட்ச பத்திரிகை அறத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கையூட்டுச் செய்திகள் விவகாரத்தில் ஊடகங்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கடந்த 2009இல் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கான சரியான செலவுக்கணக்கை சமர்ப்பிக்கத் தவறியதாகவும், மாநில செய்தித்தாள்களுக்கு அளித்த 25 விளம்பரங்களுக்கான செலவுக் கணக்கைக் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த… Continue reading குறைந்தபட்ச நேர்மையை கடைபிடியுங்கள் : ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்