அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மார்கண்டேய கட்ஜூ. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென்னை உயர்… Continue reading முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை

அரசியல், சினிமா

கனடாவில் குஷ்பு!

திமுகவில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு கடிதம் எழுதி தன் அரசியல் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை குஷ்பு. மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க குஷ்பு வெளிநாடு செல்லப்போகிறார் என்று பத்திரிகைகள் எழுதின. அந்த சமயத்தில் பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்க மறுத்த குஷ்பு வெளிநாடு பறந்தார். தற்சமயம் கனடாவின் ஒண்டாரியோ நகரத்தில் இயங்கும் தமிழ் ஒன் டிவி ஏற்பாடு செய்திருக்கும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ஒன்டாரியோ நகரத்தில் உள்ள மீடியாக்களுக்கு பேட்டி அளிக்க… Continue reading கனடாவில் குஷ்பு!

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்

அரசியல் பேசுவோம் அதிமுக அணியில் இருந்து இடதுசாரிகளின் விலகல் குறித்து பல்வேறு ஊகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த விலகலுக்கான காரணங்கள் எதுவாக இருந்தாலும் இடதுசாரிகள் தனித்து மக்களவை தேர்தலை சந்திப்பதை அரசியல் விமர்சகர் ஞாநி உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர். இடதுசாரிகளின் அடுத்தகட்ட நகர்வு குறித்து புரிதல் வர சிபிஐ(எம்)இன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையை இங்கே தருகிறோம். “தமிழகத்தில் வரும் மக்களவைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இடதுசாரிகள் தங்களுக்கான பாதையில் மாற்றுக் கொள்கைகளை கம்பீரமாக முன்னெடுத்துச்… Continue reading இடதுசாரிகளின் முடிவு மக்கள் மத்தியில் நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்