அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு

த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 'மாதொருபாகன்' நாவல் விவகாரத்தில் அமைதிக் குழு கூட்டத்தின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ் செல்வன்  தொடர்ந்த  வழக்கில் எழுத்தாளர் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கவே அமைதிக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.… Continue reading த மு எ க ச தொடர்ந்த வழக்கில் பெருமாள் முருகனையும் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு

மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு

மாதொருபாகன் நூலாசிரியர் பெருமாள் முருகனை நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்து வருவாய் அலுவலர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் தமிழில் எண்ணற்ற கதைகள், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு மாதொருபாகன் என்ற நாவலை… Continue reading மாதொருபாகன் சர்ச்சை: வருவாய் அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை முடிவை ரத்து செய்யக் கோரி வழக்கு

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், பெண் எழுத்தாளர்

தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆண்டுதோறும் கலை இலக்கியப் பரிசுவழங்கிவருகிறது. இதன்வழி 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த தமுஎகச கலை இலக்கிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு பெறுபவர் அ. வெண்ணிலா நூல்: பிருந்தாவும் இளம்பருவத்து ஆண்களும் கே. பி. பாலச்சந்தர் நினைவு நாவலுக்கான பரிசு பெறுபவர் இலங்கை எழுத்தாளர் ஸர்மிளா பெய்யீத் படைப்பு உம்மத். அமரர் செல்வன் கார்க்கி நினைவு கவிதை நூலுக்கான பரிசுபெறுபவர் இரா. விநோத்- படைப்பு: தோட்டக்காட்டீ… Continue reading தமுஎகச கலை இலக்கிய விருதுகள்: அ.வெண்ணிலா விருது பெறுகிறார்

சினிமா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், நடிகர்கள், நடிகர்ல

பி.சி.ஸ்ரீராம் சார் பாராட்டினார்-‘ஹலோ’ கந்தசாமி நெகிழ்ச்சி

வீரம் படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அவர்தான் ‘ஹலோ’ கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரக்கூடிய நேரம் காலம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. ஏன்? அவர் நடித்து வரும் படங்கள் அப்படி. நிமிர்ந்து நில், பிரம்மன், சிப்பாய், ஷங்கரின் ஐ என்று போகிறது அந்த லிஸ்ட். இந்த படங்களுக்கு முன் அவர் நடித்த… Continue reading பி.சி.ஸ்ரீராம் சார் பாராட்டினார்-‘ஹலோ’ கந்தசாமி நெகிழ்ச்சி

அறிவியல், இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்மொழி, புத்தகம்

த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக வழங்கப்படும் கீழ்க்கண்ட பரிசுகளுக்கான நூல்கள் /தகடுகள் வரவேற்கப்படுகின்றன. 2013இல் அச்சாகி வெளியான நூல்கள் ஒவ்வொரு பரிசுக்கும் இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். குறும்பட ஆவணப்படங்களுக்கான பரிசுக்கும் 2013இல் வெளியான படங்களின் சிடி அல்லது டிவிடி இரு பிரதிகள் அனுப்ப வேண்டும். எழுத்தாளர்/இயக்குநர் மற்றும் பதிப்பாளர்/ படத் தயாரிப்பாளரின் முழு முகவரி தொலைபேசி எண்ணுடன் புத்தகங்களுடன்/தகடுகளுடன் எழுதி அனுப்பிட வேண்டுகிறோம். அனுப்ப வேண்டிய முகவரி: பொதுச்செயலாளர், தமிழ்நாடு… Continue reading த மு எ க ச வழங்கும் சிறந்த நூலுக்கான பரிசை நீங்களும் வெல்லலாம்!