அரசியல், தமிழ்நாடு

இனி அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள்!

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என 200 அம்மா உணவகங்கள் உள்ளன. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த நிலையில்,திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் -சேய் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா… Continue reading இனி அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள்!

Advertisements
இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, விளையாட்டு

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் ஜெயலலிதா

ஸ்காட்லாந்து கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசு பணத்தை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த சதீஷ்குமார் சிவலிங்கம், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான ஊக்கத் தொகையையும் மேசைப்பந்து ஆண்கள்… Continue reading காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் ஜெயலலிதா

அரசியல், உலகம், சர்ச்சை

ஜெயலலிதா பற்றி அவதூறு கட்டுரை: ராஜபக்சே வருத்தம்

பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதை இழிவாக சித்தரித்து இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் கட்டுரை வெளியானது. இதற்கு தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தொடர்போராட்டங்கள் நடைபெற்றது. அதிமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள், இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின. இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்தநிலையில் இலங்கை தூதரை நேரில் அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்தது. சர்சைக் கட்டுரை குறித்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல்… Continue reading ஜெயலலிதா பற்றி அவதூறு கட்டுரை: ராஜபக்சே வருத்தம்

அரசியல், தமிழ்நாடு

ஜி.ராமகிருஷ்ணன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த கலவரம், மணல் கொள்ளைச் சம்பவம் ஆகியவை தொடர்பாக கடந்த 22-ஆம் தேதி ஜி.ராமகிருஷ்ணனின் அறிக்கை வெளியானது. அதில், முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ராமகிருஷ்ணன் உண்மைக்குப் புறம்பான தகவல்களை அளித்துள்ளார். அதனால், முதல்வர் குறித்து அவதூறு தகவல் கொடுத்த அவர் மீது… Continue reading ஜி.ராமகிருஷ்ணன் மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு!

தமிழ்நாடு, வணிகம்

புதிய தொழிற்சாலை பதிவை இனி ஆன் லைனிலேயே செய்யலாம்: ஜெயலலிதா அறிவிப்பு

புதிய தொழிற்சாலைகளை பதிவு செய்து உரிமம் வழங்குதல் மற்றும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சுமார் 42,000 தொழிற்சாலைகளின் உரிமங்களை ஆண்டுதோறும் புதுப்பித்தல் போன்ற பணிகளில் நடைமுறையில் உள்ள சிரமங்களை தவிர்க்க இனி ஆன் லைனிலேயே இந்தப் பணிகளைச் செய்ய வலைதளம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். அந்த அறிவிப்பில், ‘அரசு சேவைகள், தொழில் முனைவோருக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, உரிமம் வழங்கும் பணி இனிமேல் வலை தளம், அதாவது… Continue reading புதிய தொழிற்சாலை பதிவை இனி ஆன் லைனிலேயே செய்யலாம்: ஜெயலலிதா அறிவிப்பு