அரசியல், தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், ஏ, பி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் சி,டி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.3,000 வரையிலும் போனஸாக அளிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடந்த 2013௧4-ஆம் ஆண்டுக்கு சி, டி தொகுதியைச் சேர்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்புக்குள்பட்டு 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையாக… Continue reading தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு 152 அடியாக உயர்த்தியே தீரும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி "செயல்படுகிற ஆட்சி சீக்கிரம் வருமா?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அவருக்குப் பதிலளிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் திமுக அங்கம் வகித்த முந்தைய மத்திய அரசும், திமுகவும்… Continue reading முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்துவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

அரசியல், இந்தியா, சுற்றுச்சூழல்

விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு

இயற்கை எரிவாயு விநியோகத் திட்டத்தின்படி, தமிழக விளை நிலங்களில் குழாய்கள் பதித்ததற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதால், அவற்றை அகற்ற அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்' நிறுவனம் கேட்டது. எனினும், "வாய்மொழியாக விடுத்த இந்த வேண்டுகோளை முறைப்படி மனுவாகத் தாக்கல் செய்தால் கோரிக்கை பரிசீலிக்கப்படும்' என்று உச்ச நீதிமன்றம் கூறியது. கேரளத்தில் இருந்து கர்நாடகத்துக்கு தமிழகம் வழியாக குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த ஆண்டு திட்டமிட்டது. அத்திட்டத்தின்படி,… Continue reading விளைநிலங்களில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களை அகற்ற அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ‘கெயில்’ முறையீடு

அனுபவம், உறவுகளை மேம்படுத்துவோம், திரும, திருமணம்

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணப் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு 2009ல் சட்டமாக்கியது. பதிவு செய்யாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தது. திருமண மோசடிகள் அதிகம் நடப்பதை தவிர்க்கும் வகையிலே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாக படித்தவர்கள்கூட திருமணத்தை பதிவு செய்வதில்லை. அலுவலம் அலுவலகமாக அலைய வேண்டும் என்பதில்லை. இப்போது ஆன் லைனிலேகூட திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்... திருமணப் பதிவில், இந்து திருமண… Continue reading திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?