ஹிந்து- ஹிந்தி - ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசியது: காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக அரசு இந்திய அரசு என்பதால் அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். 2004-இல் வாஜ்பாய் தலைமையிலும், 2009-இல் அத்வானி தலைமையிலும் தேர்தலைச் சந்தித்த… Continue reading ‘ஹிந்து- ஹிந்தி – ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது’
குறிச்சொல்: தமிழகம் r
பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்
எப்போது எதிரணியில் நிற்கும் அதிமுக செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய பட்ஜெட் விஷயத்தில் ஒரே அணியாக நிற்கின்றனர். மாற்றத்தை உண்டாக்கும் எவ்வித பொருளாதார அறிவிப்புகளும் இல்லாத இந்த பட்ஜெட்டை வானளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். எல்லாம் ஊழல் வழக்குகளிலிருந்து மத்திய அரசின் தயவை நோக்கியே என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும். இதோ இந்த சந்தர்ப்பவாதிகளின் வாக்குமூலங்களை அறிக்கைகள் மூலமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். பட்ஜெட் குறித்து முதல்வர் ஜெயலலிதா… Continue reading பட்ஜெட் : கருணாநிதியும் பாராட்டுகிறார், ஜெயலலிதாவும் பாராட்டுகிறார்
சாதி மோதல் உருவாக அரசே திட்டமிடுகிறது: உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு
தருமபுரியில் இளவரசன் நினைவு தினத்தையொட்டி 8 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அரசே சாதி மோதல் உருவாக திட்டமிடுகிறது என உண்மை அறியும் குழு குற்றம் சாட்டியிருக்கிறது. இளவரசன் நினைவு தினத்தையொட்டி ஆயுதப் பயிற்சி எடுத்ததாகக் கூறி 8 பேர் கைது செய்யப்பட்டது குறித்து உண்மை அறியும் குழு சார்பில் சென்னையில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் அ.மார்க்ஸ், வி.சீனிவாசன், பேராசிரியர். ஜி.கே.ராமசாமி, விநோத் ஆகியோர் இதுகுறித்து பேசினர். ‘தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய், நத்தம் காலனியை… Continue reading சாதி மோதல் உருவாக அரசே திட்டமிடுகிறது: உண்மை அறியும் குழு குற்றச்சாட்டு
உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக அறிக்கைவிட்டு உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா என திமுக தலைவர் கருணாநிதிக்கு பதில் அறிக்கை விட்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது செயலற்ற முதலமைச்சராக விளங்கிய தி.மு.க. தலைவர் திரு. மு. கருணாநிதி, தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் எனது தலைமையிலான அரசைப் பார்த்து, "இனி என்ன செய்யப் போகிறது இந்த அரசு" என்ற தலைப்பிலே முல்லைப்… Continue reading உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்யலாமா? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதிலடி
எதற்காக ஜெயலலிதா ரயில்வே பட்ஜெட்டைப் பாராட்டினார்? கருணாநிதி
‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது’ என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:, ‘ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8000 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை;… Continue reading எதற்காக ஜெயலலிதா ரயில்வே பட்ஜெட்டைப் பாராட்டினார்? கருணாநிதி