இரண்டு முன்னணி கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. ஆனாலும் ஒரு முன்னணி கதாநாயகன் இன்னொரு முன்னொரு கதாநாயகனின் படத்தை தயாரிப்பது புதிது. வேலையில்லா பட்டதாரியின் வெற்றிக்கு பிறகு நானும் ரவுடிதான் படத்தை தயாரிக்கிறார் தனுஷ் . இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா நாயகியாக நடிக்க, அனிருத் இசையில், போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.
Tag: தனுஷ்
தனுஷ் படத்தில் சிம்பு பட டிரெய்லர்!
எஸ்.எஸ். சக்கிரவர்த்தியின் நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்திருக்கும் படம் ‘வாலு’. நாளை வெளியாகவுள்ள தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் போது, வாலு படத்தின் டிரைலர் திரையரங்குகளில் போடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை
தனுஷ், அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன் : பிரத்யேக படங்கள்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்
தனுஷ் – நஸ்ரியா நடிக்கும் ’நையாண்டி’ : பிரத்யேக படங்கள்
இயக்குநர் சற்குணம் அடுத்து இயக்கும் படம் தனுஷ் - நஸ்ரியா நடிக்கும் ’நையாண்டி’. பிரத்யேக படங்கள் இதோ...