அரசியல், தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும், மாணவர் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ... தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வுகளுக்கான முடிவுகளே முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில், அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை தனியார் பள்ளிகள் தொடங்கி விட்டன. சில பள்ளிகளில் கடந்த திசம்பர் மாதமே மாணவர் சேர்க்கை முடிவடைந்துவிட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை மாநிலப் பாடத்திட்டம், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன்… Continue reading விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

அரசியல், தமிழ்நாடு

ஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்

‘தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகள் அக்டோபர் 7-ந் தேதியன்று மூடப்படும் என்றும், பள்ளி நிர்வாகிகளும், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி கல்வித்துறை அலுவலகங்கள் முன்பு ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாகவும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி தெரிவித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ‘தனியார் பள்ளிகள் அறிவித்துள்ள போராட்டம், மாணவர்கள் நலனோ, ஆசிரியர்கள் நலனோ, கல்வித்துறை கோரிக்கையோ சம்பந்தப்பட்டது அல்ல. பொதுநலனும்… Continue reading ஜெ. சிறை அடைப்பை கண்டித்து தனியார் பள்ளிகள் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டனம்

கல்வி - வேலைவாய்ப்பு, தமிழ்நாடு

25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்

இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, நுழைவு வகுப்புகளில் ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி மறுத்த பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என கல்வி அதிகாரிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், இலவச மற்றும் கட்டாயக்… Continue reading 25 சதவீத இடஒதுக்கீட்டை மறுத்த தனியார் பள்ளிகள்: பட்டியலை தயாரிக்கிறது மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்