சினிமா, சின்னத்திரை

மா.க.பா ஆனந்துக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

பஞ்சுமிட்டாய் படத்தில் முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் மா.க.பா. ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இருவரும் விஜய் டிவியில் பணியாற்றியவர்கள் என்ற முறையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பஞ்சுமிட்டாய் படத்தின் இசைவெளியீட்டுக்காகவும் மா.க.பா.ஆனந்துக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். டி. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.பி.மோகன் இயக்கியுள்ளார்.

சினிமா

ஜெயம் ரவிக்கு கைக்கொடுக்குமா ரோமியோ ஜூலியட்?

ஹன்சிகா மோத்வானியுடன் இணையும் ரோமியோ ஜூலியட் படம் ஜெயம் ரவிக்கு பிரேக் தரும் என்று அவருடைய படக்குழுவினர் உற்சாகமாக சொல்கிறார்கள். இளைஞர்களை கவரும் காதலும் காமெடியும் இருப்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயக்கியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான்.

சினிமா

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன் மே ரிலீஸ்!

ஜகத்ஜால புஜபல தெனாலிராமன்  விடுமுறையை ஒட்டி மே மாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தில் வடிவேலு தெனாலிராமன், மன்னர் என இருவேடங்களில் நடிக்கிறார். மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் டீ. இமான். படத்தில் மீனாட்சி தீட்சித் என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் ஆரூர்தாஸ். படத்தை இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன். தயாரிப்பு AGS எண்டர்டெயின்மெண்ட்ஸ்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் (28-02-2014) பனிவிழும் மலர்வனம், அமரா, வல்லினம், தெகிடி என நான்கு படங்கள் வெளியாகின்றன. காட்டுக்குள் சுற்றுலாவுக்காக செல்லும் ஒரு குடும்பம், புலியின் பார்வையில் படுகிறது. அந்தப் புலியிடமிருந்து அந்தக் குடும்பம் எப்படி தப்பிக்கிறது என்பதை பனிவிழும் மலர்வனம் படம் சொல்கிறது. இந்தப் படத்தில் ஹாலிவுட் படங்களில் நடித்த புலி நடித்திருக்கிறது. அமரா ஆக்ஷன் திரில்லர் படம். டி. இமான் இசையில் பாடல் சில இனிக்கின்றன. நடிகர் நகுல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என நம்பும் படம்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

சினிமா

விக்ரம் பிரபு சிகரம் தொடுவாரா?

கும்கி படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். இதில் யுடிவி தயாரிப்பில் தூங்காநகரம் கெளரவ் இயக்கும் சிகரம் தொடு படமும் ஒன்று. இதில் விக்ரம் புரபுவுடன் மோனல் கஜ்ஜார், சத்யராஜ் நடிக்கிறார்கள். இசை டி. இமான்.