சினிமா

ஜெயம் ரவிக்கு கைக்கொடுக்குமா ரோமியோ ஜூலியட்?

ஹன்சிகா மோத்வானியுடன் இணையும் ரோமியோ ஜூலியட் படம் ஜெயம் ரவிக்கு பிரேக் தரும் என்று அவருடைய படக்குழுவினர் உற்சாகமாக சொல்கிறார்கள். இளைஞர்களை கவரும் காதலும் காமெடியும் இருப்பதால் நிச்சயம் இது வெற்றிப்படமாக அமையும் என்கிறது படக்குழு. இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயக்கியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இசையமைக்கிறார் டி. இமான்.

சினிமா, நடிகர்கள்

என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

தெலுங்கு நடிகரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், திருமணம் ஆகிவிட்டது, இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார், தமிழ் படங்களில் நடிக்கத்தடை, தோலில் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று நடிகை அஞ்சலியைச் சுற்றி ஏகப்பட்ட வதந்திகள், கிசுகிசுக்கள்... ஆனால் அஞ்சலியோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜெயம் ரவியுடன் கிராமத்துப் பெண்ணாக சாலிக்கிராமத்தில் உள்ள படத்தளத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் அஞ்சலிக்கு இதையெல்லாம் துடைத்தெறியும் மனப்பக்குவம் நிச்சயம் வந்திருக்கும். நம்மிடம் பேசிய அவர், ‘என்னைப் பற்றிய வதந்திகள் பற்றி… Continue reading என்னைப் பற்றிய வதந்திகளுக்குக் காரணம் என் சித்திதான் : அஞ்சலி மனம் திறக்கிறார்

சினிமா

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் – முதல் பார்வை

  காதலையும் காதலர்களையும் அடையாளப்படுத்த ரோமியோ ஜூலியட்  என்ற பெயரை காலம் காலமாக உபயோகப்படுத்தி வருகிறோம். அப்படிப்பட்ட கவித்துவமான ரோமியோ ஜூலியட்   என்ற தலைப்பை எந்த படத்துக்கும் சூட்டாமல் விட்டுவைத்தது  ஆச்சர்யம் தான். இப்படி ஒரு அருமையான காதல் தலைப்பை எஸ்.நந்தகோபால் வழங்க மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு சூட்டி அந்த பெருமையை பெற்றுருக்கிறார். ஆர்யா நடித்த கலாபக் காதலன், ஜீவன் நடித்த மச்சக்காரன், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை… Continue reading ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் ரோமியோ ஜூலியட் – முதல் பார்வை

சினிமா

சென்னை திரைப்பட விழா – இன்று துவக்கம்!

சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இன்று மாலை கமல் ஹாசன், ஹிந்தி நடிகர் அமீர்கான் துவக்கிவைக்கிறார்கள். 58 நாடுகளைச் சேர்ந்த 165 திரைப்படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளன. அதோடு இந்த ஆண்டு வெளியான 12 தமிழ் திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற அறிமுக விழாவில் நடிகர்கள் ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சுஹாசினி, பூர்ணிமா, ரோகிணி ஆகியோர் கலந்துகொண்டனர்.