சினிமா, சின்னத்திரை, தொலைக்காட்சி தொடர்கள்

அமலா நடிக்கும் உயிர்மெய் தொடரில் அதிரடி மாற்றங்கள்!

உயிரும் மெய்யும் கலந்ததுதான் நம் மனித வாழ்க்கை. நமது உடலுக்கு உபாதைகள் வரும் போது உயிருக்கு ஆபத்து இல்லாமல் மருத்துவம் செய்து காப்பாற்றுவது டாக்டர்களின் கடமை. அந்த டாக்டர்களின் வாழ்விலும், தொழிலிலும் வரும் பிரச்னைகளை அவர்கள் எப்படி வெற்றி கொள்கிறார்கள் என்பதை சொல்கிற உயிர் மெய் தொடர்.  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அமலாவின் நடிப்பில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான இந்தத் தொடர்  வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரபாகவுள்ளது. இயக்குநர்… Continue reading அமலா நடிக்கும் உயிர்மெய் தொடரில் அதிரடி மாற்றங்கள்!

சினிமா, சின்னத்திரை, பெண் இயக்குநர்

கமர்ஷியல் படம் இயக்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்!

குணசித்திர நடிகையாக பெயர் எடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன் ஆரோகணம் என்ற படத்தின் மூலம் இயக்குநரானார். மனநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை யதார்த்தமாக படம் பிடித்துக்காட்டிய இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியில் நல்ல படம் என்று பெயர் வாங்கியது. அதற்குப் பிறகு ஜீ தமிழின் பிரபல டாக் ஷோவான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். தற்போது கமர்ஷியல் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் லட்சுமி. படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

சினிமா, தொலைக்காட்சி நிகழ்வுகள்

பொங்கலுக்கு புத்தம் புதிய சூப்பர் ஹிட் படங்கள் டிவியில் பார்க்கலாம்!

பொங்கலை முன்னிட்டு புத்தம் புதிய சூப்பர் ஹிட் படங்களை ஒளிபரப்ப இருக்கிறது விஜய் டிவி. வரும் செவ்வாய் கிழமை காலை 11 மணிக்கு இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலாகுமாரா படமும், மாலை 6 மணிக்கு ராஜா ராணி படமும் ஒளிபரப்பாகிறது. ஜனவரி 15ம் தேதி புதன் அன்று மாலை 6 மணிக்கு நவீன சரஸ்வதி சபதம் ஒளிபரப்பாகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 14ம் தேதி தேசிங்கு ராஜா ஒளிபரப்பாகிறது.

இசை கச்சேரி, இசை கலைஞர்கள், சைந்தவி திருமணம்!, தொலைக்காட்சி நிகழ்வுகள், மார்கழி சங்கீத சீசன்

மார்கழி சங்கீத சீசன் தொடங்கியாச்சு!

ஜீ தமிழ் வழங்கும் மார்கழி ராகம் நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள நாரத கான சபாவில் இன்று காலை 10 மணி முதல் நடக்கவிருக்கிறது. இன்று தொடங்கி நாளையும், நாளை மறுநாளும் (15,16,17 நவம்பர் 2013) நடக்கவிருக்கும் கச்சேரிகளில் எஸ். சவுமியா, சைந்தவி, ஓ. எஸ். அருண் ஆகியோர் பங்கேற்கிறார்கள். அனுமதி இலவசம். இலவச டிக்கெட்டுகள் ஜீ தமிழ் அலுவயகத்திலும் கிரி டிரேடிங் ஏஜென்ஸியிலும் கிடைக்கும்.