சினிமா

யான்: முதல் பார்வை

ஜீவா, கார்த்திகா நடிக்கும் யான் படத்தை ரவி கே சந்திரன் இயக்குகிறார். ஒளிப்பதிவாளரான ரவி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இசை ஹாரிஸ் ஜெயராஜ். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார் ஜீவார். என்கவுண்டர் பின்புலத்தில் கதை அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார் இயக்குநர் ரவி கே. சந்திரன்.  

சினிமா

நடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்!

நடிகர் என்பதோடு தயாரிப்பாளராக பாண்டிய நாடு படத்தின் மூலம் அறிமுகமானார் விஷால். படம் நன்றாக ஓடியதும். அடுத்து நான் சிகப்பு மனிதன், பூஜை படங்களை தயாரித்தார். பூஜை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலை தன் நண்பர் விஷ்ணு நடித்த ஜீவா படத்தை வாங்கியதன் மூலம் விநியோகிப்பாளராகவும் மாறினார். இப்போது வி மியூசிக் என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தான் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆவதை… Continue reading நடிகர் விஷாலின் பதிய முயற்சிகள்!

சினிமா, Uncategorized

ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் ஸ்ரீகாந்த் இதுவரை சுமார் 20 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது 'நம்பியார்' படம் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் கோல்டன் ப்ரைடே பிலிம்ஸ் சார்பில் வந்தனா ஸ்ரீகாந்த் தயாரித்துள்ள படம்தான் 'நம்பியார்'. ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா, ஜான்விஜய், ஆர்யா, பஞ்சு சுப்பு, நடித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கணேஷா இயக்கியுள்ளார். 'நம்பியார்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில்… Continue reading ஸ்ரீகாந்த்தின் வார்த்தைகள் இன்னமும் ஊக்கம் தருகின்றன! அஞ்சான் சூர்யா நெகிழ்ச்சி

சினிமா

என்றென்றும் புன்னகை வெற்றி சந்திப்பு படங்கள்

சமீபத்தில் வெளியான ஜீவா, த்ரிஷா, விநய், ஆண்ட்ரியா, சந்தானம் நடித்த என்றென்றும் புன்னகை வெற்றி பெற்றதைக் கொண்டாடும் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஜீவா, விநய், த்ரிஷா, இயக்குநர் அஹமது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்

இந்த வாரம் (20-12-2013) பெரிய பட்ஜெட் படங்களான என்றென்றும் புன்னகை, பிரியாணி வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படமான தலைமுறைகள் இதே நாளில் வெளியாகிறது.  இந்தப் படங்களுடன் இந்தியிலிருந்து தூம் 3 மொழிமாற்றம் ஆகி வெளியாகிறது. ஜீவா, வினய், சந்தானம், த்ரிஷா, ஆன்ட்ரியா நடித்து வெளிவரவிருக்கும் என்றென்றும் புன்னகை காதல், காமெடிக்கு கேரண்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா நடித்து வெளிவரவிருக்கும் பிரியாணி, ஆக்‌ஷன் காமெடி படம். ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் கார்த்தியும் வெங்கட்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள் : முன்னோட்டம்