கண்காட்சி

உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியப் பெண்கள்!

’’பெண்களின் உள்மனதில் என்ன இருக்கிறது என்று சொல்லவே முடியாது என்பார்கள். பெண்களின் உள்மனதை அறிய அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். பெண்களின் உணர்வுகளை வகைப்படுத்துவதையும் அவை எந்த வகையில் பெண்களை சமூகத்துடன் பிணைக்கின்றன என்பதையும் ஓவியங்கள் வழியே காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.” என்கிறார் லதா. சென்னை சோழமண்டல ஓவியக் கலைஞரான லதா, ‘பக்தி’ என்கிற தலைப்பில் தன் ஓவியங்களை காட்சிப்படுத்தியிருக்கிறார். சென்னை தட்சிணசித்ராவில் வரும் ஆகஸ்ட் 20ந் தேதி முதல் 31 வரை இந்த ஓவியக் கண்காட்சி நடக்கவிருக்கிறது.