அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

உலக புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்ற அரசிய‌ல் விமர்சகருமான‌ யூ.ஆர்.அனந்தமூர்த்தி (81) வெள்ளிக்கிழமை மாலை பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.அவரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவ‌ர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி அருகேயுள்ள மெலிகே கிராமத்தில் 1932 டிசம்பர் 1-ம் தேதி பிறந்த உடுப்பி ராஜகோபாலச்சார்ய அனந்த் மூர்த்தி, இந்துமத… Continue reading எழுத்தாளர் யூ.ஆர்.அனந்தமூர்த்திக்கு அஞ்சலி

Advertisements
அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்!

காங்கிரஸ் அரசின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் பாரு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா மீது குற்றச்சாட்டுக்களை வைத்தன. இதனால் அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சைகள் எழுந்தன. தற்போது மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில்,  என் தந்தை அரசியலுக்கு ஏற்றவர் அல்ல என்று ஒரு… Continue reading காங்கிரஸை அச்சுறுத்தும் புத்தகங்கள்!

அரசியல், அரசியல் பேசுவோம், தேர்தல் 2014

தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?

அரசியல் பேசுவோம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்துகொண்டே பல்வேறு திட்டங்களுக்கு ஆதராக வாக்களித்துவிட்டு இப்போது அவற்றை எதிர்த்து தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கும் திமுகவை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கடுமையாக விமர்சித்திருக்கிறது. “தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் அப்படி மவுனம் சாதிக்கிறது? கனிமொழியின் கனவுத்திட்டம் என்பதாலா?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டக் குழ. இன்று வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கை, “ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈறும், பேனும்”… Continue reading தி.மு.க. தேர்தல் அறிக்கை அணுசக்தி பற்றி ஏன் மவுனம் சாதிக்கிறது?