அரசியல், தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்காக உயிர் நீத்த 193 பேர்!

சொத்துக் குவிப்பு வழக்கில் தான் சிறையில் அடைக்கப்பட்டதால் ஏற்பட்ட துயரத்தை தாங்காமல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் உயிரிழந்த 193பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும் வெவ்வேறு விதமாக காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் சிகிச்சைக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என கூறியுள்ளார். தமது வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளில் இருந்து வெற்றிகரமாக மீண்டு வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர்,… Continue reading ஜெயலலிதாவுக்காக உயிர் நீத்த 193 பேர்!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கேள்வி - பதில் வடிவில் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:- கேள்வி: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக தாங்கள் எதுவுமே கூறவில்லையே? பதில்: இது நிச்சயம் மகத்தான தீர்ப்பு. நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கே: முக்கியமான வழக்குகளை மாநிலம் விட்டு வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றிய சம்பவம் உண்டா?… Continue reading ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு: கருணாநிதி கருத்து

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு:

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. ஜெயலலிதாவை விடுவிக்க எதிப்பது ஏன என விளக்கி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னகலா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். தசரா விடுமுறை முடிந்து வழக்கான அமர்வு இந்த மனு… Continue reading அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு:

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு, Uncategorized

ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளதை முன்னிட்டு தமிழக -கர்நாடக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக பரப்பன அக்ரஹாரா நீதிமன்றத்திற்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வரவுள்ளதால் தமிழக - கர்நாடக எல்லை மற்றும் பரப்பன அக்ரஹாரா நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீர்ப்பு வழங்கப்படும் நாளில் தமிழகத்திலிருந்து ஏராளமான கட்சித் தொண்டர்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக… Continue reading ஜெ. சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: பாதுகாப்புப் பணியில் 6000 போலீசார்

அரசியல், தமிழகம், தமிழ்நாடு

எதற்காக ஜெயலலிதா ரயில்வே பட்ஜெட்டைப் பாராட்டினார்? கருணாநிதி

‘தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ரயில்வே பட்ஜெட் பற்றி பலபட புகழ்ந்து பாராட்டியிருக்கிறார். அது ரயில்வே பட்ஜெட்டுக்காக என்பதை விட, வருமான வரி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் வரவிருப்பதையொட்டிய பாராட்டாக இருக்கலாம் என்று யாரும் எண்ணிடக் கூடாது’ என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார். ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:, ‘ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே 8000 கோடி ரூபாய்க்கான கட்டண உயர்வினை;… Continue reading எதற்காக ஜெயலலிதா ரயில்வே பட்ஜெட்டைப் பாராட்டினார்? கருணாநிதி