இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

உங்கள் குழந்தை மூடி டைப்பா?!

செல்வ களஞ்சியமே- 93 ரஞ்சனி நாராயணன் சில குழந்தைகள் எல்லோருடனும் சுலபமாகப் பழகுகின்றன. சில வெளி மனிதர்களைப் பார்த்தால் அம்மாவின் பின்னாலோ அப்பாவின் பின்னாலோ போய் ஒளிந்து கொள்ளும். சிறு குழந்தையாய் இருக்கும்போது பரவாயில்லை. இதே கூச்ச சுபாவம் பெரியவனாக ஆன பின்பும் தொடர்ந்தால் குழந்தைக்கே அது நல்லதல்ல. அம்மாவோ அப்பாவோ தனிமை விரும்பியாக இருந்தால் குழந்தையும் அப்படி இருக்கலாம். சில பெற்றோர்கள் ‘என் பெண் மூடி டைப். யாருடனும் பேசமாட்டாள்’ என்று பெருமையாகவும் சொல்லிக் கொள்வார்கள்.… Continue reading உங்கள் குழந்தை மூடி டைப்பா?!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’

செல்வ களஞ்சியமே- 92 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஒரு திருமணத்திற்காக மும்பை சென்றிருந்தோம். நாங்கள் எல்லோரும் வெளியூரிலிருந்து வந்திருந்ததினால் எங்களுக்கு தங்குவதற்கு ஒரு ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பல நாட்களுக்குப் பின் கூடியிருந்ததால், நாங்கள் எல்லோரும் ஒரே அறையில் உட்கார்ந்துகொண்டு பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் உறவினரின் பேரன் அந்த அறையில் போடப்பட்டிருந்த கட்டிலின் மேல் இருந்த வெள்ளைவெளேரென்ற படுக்கை விரிப்பின் மீது தான் கொண்டு வந்திருந்த கலர் பென்சில்களினால் கிறுக்கத் தொடங்கினான். சிறுவனின் பெரியப்பா அவனை கோபித்துக்… Continue reading ‘யார் என்ன நினைத்தால் எனக்கென்ன?’

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, மருத்துவம்

குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

செல்வ களஞ்சியமே - 91 ரஞ்சனி நாராயணன் சமீபத்தில் ஹிந்து ஆங்கில நாளிதழில் வந்த ஒரு செய்தியின் தொகுப்பு இது. சிறு குழந்தைகளுக்கு வரும் ஆனால் அதிகம் தெரிந்திராத அதிகம் கண்டறியப்படாத நோயைப்பற்றிய கட்டுரை. செல்வ களஞ்சியம் தொடரை தொடர்ந்து படிக்கும் பெற்றோர்களுக்கு உதவும் என்று எழுதுகிறேன். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் பிஸிஜி தடுப்பூசி போட்டவுடன் ஒன்றன்பின் ஒன்றாக இறந்தது புரியாத புதிராக இருந்தது அந்தத் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுக்கு. ஐந்தாவது குழந்தைக்கு இந்தத்… Continue reading குழந்தை வளர்ப்பில் பரம்பரை குறைபாடுகள் குறித்தும் விழிப்பாக இருங்கள்!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேர உணவுகள்!

செல்வ களஞ்சியமே- 90 ரஞ்சனி நாராயணன் என் பெண்ணிடம் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு: தேர்வுக்கு முதல் நாள் ‘நான் படித்ததெல்லாம் மறந்து விட்டது....!’ என்று சொல்லிவிட்டு ‘ஓ!’ என்று அழுவாள். இது ஒவ்வொருமுறை தேர்விற்கு முன்னும் நடக்கும். வழக்கமான ஒன்று என்பதால் நானும் பேசாமல் அவள் அழுது ஓயட்டும் என்று விட்டுவிடுவேன். அழுது முடித்தவுடன் ‘பளிச்சென்று’ என்று ஆகிவிடும் அவள் முகம்! மனதும் லேசாகிவிடும். தேர்வுக்கு முன் வரும் மனஅழுத்தம் போயே போச்! பல மாணவ… Continue reading தேர்வு நேர உணவுகள்!

இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே

தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா?

செல்வ களஞ்சியமே - 89 ரஞ்சனி நாராயணன் தேர்வு சமயத்தில் என்ன விளையாட்டு? என்று தயவுசெய்து உங்கள் குழந்தைகளை கோபித்துக் கொள்ளாதீர்கள். தூக்கம் போலவே விளையாட்டும் குழந்தைகளின் உடலையும், மனதையும் புத்துணர்வு பெற வைக்கிறது. மாலை முழுதும் வேண்டாம் ஒரு அரைமணியாவது விளையாடிவிட்டு வந்து படிக்க உட்காரட்டும். என்ன விளையாட்டு விளையாடலாம்? கிரிக்கெட் போன்ற போட்டி போடும், நிறைய பேர்கள் விளையாடும்  விளையாட்டுக்களை தவிர்த்துவிட்டு பந்து ஒன்றை தட்டித் தட்டி விளையாடும் விளையாட்டை விளையாடலாம். பந்தினை விடாமல்… Continue reading தேர்வு நேரம்: நினைவுத்திறன் வளர்க்க மாத்திரையா?