செல்வ களஞ்சியமே – 99 ரஞ்சனி நாராயணன் ஒரு குழந்தையை ‘கெட்ட குழந்தை என்று முத்திரை குத்துவது மிகமிகத் தவறு. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்பதை பெற்றோர் நினைவில் கொள்ள வேண்டும். தான் ஒரு கெட்ட குழந்தை என்ற எண்ணம் குழந்தையின் மனதில் ஊறிவிட்டால் அப்படியே நடந்து கொள்ளும். வளர்ந்த பின்னும் அந்த எண்ணம் மாறாது. அதனால் சிறு வயதிலேயே அந்தக் குழந்தையிடம் பேச வேண்டும். என்ன சொல்லலாம்? ‘இங்கே பாரு, நீ… Continue reading குழந்தைகளுக்கு ரோல் மாடல் யார் தெரியுமா?!
Tag: செல்வ களஞ்சியமே
கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?
செல்வ களஞ்சியமே - 98 ரஞ்சனி நாராயணன் அந்தக் குழந்தைக்கு தனக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை; நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று வருத்தம். அது கோபமாக வெளிப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உறவினர் ஒருவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை. ஆளுக்கு ஒரு செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். 5 வயதுக் குழந்தை ‘நூக்’ (ஐபேட் மாதிரி ஒன்று) வைத்துக் கொண்டு அதில் ஏதோ விடீயோ பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் அப்பா அதைப் பார்த்துவிட்டு ‘இன்னிக்கு முழுக்க யாரும் எலெக்ட்ரானிக்… Continue reading கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?
உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா?
செல்வ களஞ்சியமே- 97 ரஞ்சனி நாராயணன் மற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம் சொல்லித்தர வேண்டுமா? ஆம் என்கிறது சமீபத்திய ஆய்வு. இரக்கம் பற்றி இரண்டு பதிவுகளுக்கு முன் பார்த்தோம். செய்தித்தாளில் படித்த ஒரு விஷயம் எனக்கு மிகவும் வியப்பைத் தந்தது. ஹார்ட்வேர்ட் மனோதத்துவ இயலாளர் ஒருவர் ‘Making Caring Common’ என்று ஒரு வகுப்பு எடுக்கிறாராம் என்பதே அந்தச் செய்தி. மற்றவர்கள் மேல் அக்கறை கொள் என்று ஒரு குழந்தைக்கு நாம்… Continue reading உதவும் குழந்தைகளைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோமா?
குழந்தைகளுடன் பேசுவது எப்படி?
செல்வ களஞ்சியமே – 96 ரஞ்சனி நாராயணன் சென்னையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம், ரயிலில். பக்கத்து இருக்கையில் ஒரு சிறுமி. பார்த்தவுடன் ரொம்பவும் சிநேகிதமாகச் சிரித்தாள். தனது தந்தையுடன் ‘statue’ விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் எங்களுடன் பேச ஆரம்பித்தாள். என் கணவருடன் அதே விளையாட்டைத் தொடர்ந்தாள். அவள் ‘statue’ சொன்னவுடன், என் கணவர் வேண்டுமென்றே அசைவார். கையைக் காலை ஆட்டுவார். அப்போது அந்தக் குழந்தை மிகவும் சீரியஸ்ஸாக முகத்தை வைத்துக் கொண்டு, ‘statue’ சொன்னால் ஆடாமல்… Continue reading குழந்தைகளுடன் பேசுவது எப்படி?
குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!
செல்வ களஞ்சியமே - 95 ரஞ்சனி நாராயணன் நாம் எல்லோருமே நம் குழந்தைகள் வெற்றியாளராக வரவேண்டும், செல்வந்தராக ஆக வேண்டும், பிரபலமானவராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் எங்கு பார்த்தாலும், வன்முறை, கொடூரங்கள் என்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் குழந்தைகளை இரக்கம் உள்ளவர்களாக, மெல்லிய உணர்வுகள் கொண்டவர்களாக வளர்ப்பது வெற்றி, செல்வம், பிரபலம் இவற்றை விட மிகவும் முக்கியம் என்று தோன்றுகிறது. மற்றவர்களைப் பற்றிய அக்கறை, மற்றவர்களிடம் மரியாதை, இரக்க குணம் இவைகளை எப்படிக்… Continue reading குழந்தைகளை உணர்வு உள்ளவர்களாக உருவாக்குங்கள்!