அரசியல், இலங்கை, தமிழ்நாடு

ராஜிவ்காந்தி கொலையில் குமரன் பத்மனாபாவை விசாரிக்கக் கோரும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த குமரன் பத்மநாபன், கடந்த 2009ஆம் ஆண்டு மலேசியாவில் இலங்கை ராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவருக்கு இலங்கை அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. இந்த நிலையில், குமரன் பத்மநாபனை இந்தியா அழைத்து வந்து, ராஜிவ் கொலை குறித்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியான மோகன்ராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்யநாராயணா ஆகியோர் தலைமையிலான அமர்வு, இந்த மனு விசாரணைக்கு… Continue reading ராஜிவ்காந்தி கொலையில் குமரன் பத்மனாபாவை விசாரிக்கக் கோரும் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

நீதிபதி லஹோதிக்கு 6 கேள்விகள்: சர்ச்சை முற்றுகிறது!

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னர் ஆட்சியில் இருந்தபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சியின் நிர்பந்தம் காரணமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, புதிய பதிவை எழுதி சர்ச்சையை நீட்டித்திருக்கிறார். சர்ச்சைக்குரிய அந்தப் பதவி நீட்டிப்பை வழங்கத் துணைபோனவர்கள் என கட்ஜு குற்றம்சாட்டிய மூன்று நீதிபதிகளில் ஒருவரான,… Continue reading நீதிபதி லஹோதிக்கு 6 கேள்விகள்: சர்ச்சை முற்றுகிறது!

தமிழகம், தமிழ்நாடு

தாயின் சாதியை வைத்து குழந்தைக்கு சாதி சான்றிதழ்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தாயின் சாதியை வைத்து அவருடைய குழந்தைக்கு சாதி சான்றிதழ் வழங்க அறிவுறுத்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பாலியல் அத்துமீறல் மூலம் பிறந்த 9 வயதான குழந்தை தன் தாயின் சாதியை வைத்து தனக்கு சாதி சான்றிதழ் தர வலியுறுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டு தன் தாய் மூலமாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். ஜெயச்சந்திரன், நீதிபதி எம். வேண்கோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, அவருடைய தாயின் ஆதி திராவிடர் பிரிவு… Continue reading தாயின் சாதியை வைத்து குழந்தைக்கு சாதி சான்றிதழ்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு