'பூஜை' படத்துக்கான வரவேற்பைப் பார்ப்பதற்காக மதுரைக்கு விசிட் அடித்த நடிகர் விஷால், சூரி மகனுக்குப் பிறந்த நாள் என்பதை அறிந்து ராஜாக்கூர் கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். விஷாலை பார்த்ததும் ராஜாக்கூர் கிராமமே ஆனந்தத்தில் கொண்டாட, சூரி குடும்பத்தினரும் நெகிழ்ந்து போனார்கள். கடந்த 27ம் தேதி சூரி மகன் சர்வானுக்கு முதல் பிறந்த நாள். தனது சொந்த ஊரான ராஜாக்கூர் கிராமத்தில் மகனின் பிறந்த நாளைக் மிக எளிமையாகக் கொண்டாடினார் சூரி. “என் மகன் சர்வான். அம்பட்டுச்… Continue reading சூரி கிராமத்துக்கு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த விஷால்!
Tag: சூரி
நட்புக்கு மரியாதை கொடுத்தார் சூரி: புகழும் கத்துக்குட்டி படக்குழு
நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது கத்துக்குட்டி படக்குழு. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நரேன் - சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் 'கத்துக்குட்டி' இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அண்ணன் சூரி அவர்கள் 'கத்துக்குட்டி' படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. 'கத்துக்குட்டி' ஷூட்டிங்கிற்காக நாம் சூரி அண்ணனின் கால்ஷூட் கேட்டபோது, அவருடைய டைரி நிரம்பி வழிந்த நேரம். 'கத்துக்குட்டி'… Continue reading நட்புக்கு மரியாதை கொடுத்தார் சூரி: புகழும் கத்துக்குட்டி படக்குழு
நளனும் நந்தினியும் : முதல் பார்வை
லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் படம் நளனும் நந்தினியும். இந்த படத்தில் மைக்கேல் கதாநாயகனாக நடிக்கிறார். நந்திதா கதாநாயகியாக நடிக்கிறார். சூரி, ஜெயபிரகாஷ், அழகம் பெருமாள், சாம்ஸ் ரேணுகா, மதுரை ஜானகி, மதுமிதா, ரவிராகுல், சௌந்தர்ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். கிராமத்து பின்னணியில் அழகான காதல் கதையாக உருவாகிறது நளனும் நந்தினியும். ஒளிப்பதிவு - நிஸார் இசை - அஸ்வத் பாடல்கள் - கங்கைஅமரன், மதன்கார்க்கி, நிரஞ்சன்பாரதி. நடனம் - சதீஷ் ஸ்டன்ட் - எஸ்.தியாகராஜன் எடிட்டிங் … Continue reading நளனும் நந்தினியும் : முதல் பார்வை
சசிகுமார் படத்தில் மிஸ் உத்தரகண்ட்!
கமல்ஹாசன் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கும் பிரம்மன் படத்தில் சசிகுமாருக்கு இணையாக நடிக்கிறார் புதுமுகம் லாவண்யா திரிபாதி. இவர் 2009ல் மிஸ் உத்தரகண்ட் பட்டம் பெற்றவர். மாட்லிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார் இவர். கமர்ஷியல் படமாக உருவாகிவரும் பிரம்மன் படத்தில் சந்தானம், சூரி நடித்திருக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்கிறார். சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்...
இந்த வார ரிலீஸ் படங்கள்!
இந்த வாரம் பண்ணையாரும் பத்மினியும், உ, புலிவால் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா நடித்திருக்கும் பண்ணையாரும் பத்மினியும் கிராமத்து பின்னணியில் நடக்கும் கதை. பாடல்கள் ஹிட் ஆகி உள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. தம்பி ராமையா மற்றும் புதுமுக நடிகர் நடித்திருக்கும் உ நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. ராதிகாவின் ராடன் மீடியாவின் இணை தயாரிப்பில் விமல், பிரசன்னா, ஓவியா, இனியா,சூரி, தம்பிராமையா நடித்திருக்கும் புலிவால் நகைச்சுவையுடன் த்ரில்லர் கலந்த படம்.