அரசியல், அரசியல் பேசுவோம், பெண், பெண் அரசியல்வாதிகள்

மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவியேற்பு

பதினாறாவது மக்களவையின் புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் தேர்வாகியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கும் சுமித்ரா, மத்திய பிரதேச மாநிலத்தின் இண்டூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக 8 முறை தேர்வானவர். சுமித்ரா மகாஜன் சட்டம் படித்தவர். மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் இரண்டாவது பெண் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் என்பது குறிப்பிடத்தகுந்தது.