அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், உலகம்

ஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி!

ஒரு சொல் கேளீர் நந்தினி அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி நாளை இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக இந்தியா வரும் அவர், இந்திய தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் உலக பிரச்னைகள் குறித்து பேச உள்ளார். ஜான் கெர்ரியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடன் இணைந்து  பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் சந்திக்கும் போது பேச உள்ள விவகாரங்கள் குறித்து அலசுவார்கள் என்று தெரிகிறது.… Continue reading ஜான் கெர்ரியின் மோடி புகழாரத்தின் பின்னணி!

அரசியல், சுற்றுச்சூழல், தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவிற்கு மீறி டீசல் வாங்கி குவிக்கப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு... ‘‘கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகு பரிசோதனைகளுக்காக ஒரு மாதம் மூடப்பட்டிருப்பதாகவும், ஒரு மாதத்தில் வர்த்தக ரீதியிலான உற்பத்தித் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதற்கிடையே கூடங்குளம் அணுமின் நிலையத்தார் டீசலை வாங்கித் தீர்க்கிறார்கள். கீழ்க்காணும் அட்டவணையைப் பாருங்கள்: நாள்                       டீசல் அளவு (லிட்டர்)     ரூபாய் மதிப்பு              டீசல் விற்ற நிறுவனம் மே 26, 2014        ஒரு லட்சம்                           55,72,160                           இ… Continue reading கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு அளவுக்கு மீறி வாங்கி குவிக்கப்படும் டீசல்

உலகம், வணிகம்

25 ஆண்டுகளுக்குப் பின் தங்க உற்பத்தியில் அமெரிக்காவை விஞ்சியது ரஷ்யா!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தங்க உற்பத்தியில் அமெரிக்காவை முறியடித்துள்ளது ரஷ்யா. சீனா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த படியாக தற்போது மூன்றாவது இடத்துக்கு வந்துள்ளது ரஷ்யா. 2013 ஆம் ஆண்டில் 254 241 டன் தங்கத்தை உற்பத்தி செய்திருப்பதாக ரஷ்ய தங்க உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் தங்கம், இயற்கை எரிவாயு, இயற்கை எண்ணெய் போன்றவை புவியியல் கண்டுபிடிப்புகளாக கொள்ளப்படுவதால் அவற்றிற்கு வரி விதிப்பதில்லை. கடந்த 5 வருடங்களில் 270 கனிம சுரங்கங்களை கண்டுபிடித்துள்ளது ரஷ்யா.

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

பீர்க்கன்காயின் வரலாறு!

காய்கறிகளின் வரலாறு –  15 பீர்க்கன்காய் வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த கொடி வகைதான் பீர்க்கன்காயும். காட்டுச் செடியாக வளர்ந்திருக்கும் இந்தச் செடியிலிருந்து மேம்படுத்தியதே தற்போது நாம் சமையலுக்குப் பயன்படுத்து பீர்க்கன்காய். இந்தியாவில் மட்டுமல்லாமல் வியட்நாம், சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் இதை உணவாக உட்கொள்கின்றனர். நன்கு பழுத்து காயந்த பீர்க்கனிலிருந்து நாறை பிரித்தெடுத்து குளியலின்போது தேய்த்து குளிக்கப் பயன்படுத்தும் பழக்கமும் நம்மைப் போலவே இந்த நாடுகளிலும் செய்கிறார்கள். எகிப்தில் இந்த நாறை உற்பத்தி செய்வதற்காகவே பீர்க்கை வளர்க்கிறார்கள்.… Continue reading பீர்க்கன்காயின் வரலாறு!

அனுபவம், அறிவியல், அறிவியல் எழுத்து, கண் பாதுகாப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம், வரலாறு

கண்ணாடி உருவாகி வந்த கதை!

நோய்நாடி நோய்முதல் நாடி - 24 ரஞ்சனி நாராயணன் அந்த காலத்தில் கண் தெரியவில்லை என்று சொன்னால் வீட்டில் வேடிக்கையாகச் சொல்வார்கள்: இரண்டு சோடா பாட்டில்களை வாங்கிக் கொண்டு மருத்துவரிடம் போ. அடியை தட்டி கண்ணாடி செய்து போட்டுவிடுவார்கள் என்று. ஒரு காலத்தில் கண்ணாடி அணிவது என்பது கேலிக்குரிய விஷயம். இப்போதோ இரண்டு கடைகளுக்கு நடுவில் ஒரு கண்ணாடிக் கடை. அணிவது கண்களின் மேல். இதை தாங்கிப் பிடிப்பது நம் காதுகள். பெயர் என்னவோ மூக்குக் கண்ணாடி.… Continue reading கண்ணாடி உருவாகி வந்த கதை!