அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆய்வு, சமணமும் தமிழும்

சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

சமணசமயம் சிறப்படைந்த வரலாறு சமணமும் தமிழும் – 7 அறிஞர் சீனி. வெங்கடசாமி பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றி தழைத்துக் தளிர்த்து இருந்ததைத் தேவராம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக் கோயில்களும் காடுமேடுகளில்… Continue reading சமணசமயம் தமிழ்நாட்டில் ஏன் செல்வாக்கடைந்தது?

Advertisements
இலக்கியம், தமிழ்நாடு

அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

அழியும் வரலாறு சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன்பேட்டையில்  தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் வாழ்ந்த இல்லம்  கடந்த மாதம் 13 ஆம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழுக்கு உ.வே.சாமிநாதய்யர் ஆற்றிய பணிகள் ஈடு இணையற்றவை. கும்பகோணம் மற்றும் சென்னை கல்லூரிகளில் தமிழாசிரியராக பணியாற்றியது மட்டுமின்றி, அழியும் நிலையில் இருந்த சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம், புறநானூறு, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு,  நெடுநல்வாடை உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட இலக்கிய ஓலைச்சுவடிகளை புத்தகங்களாக… Continue reading அபார்ட்மெண்டுக்காக இடித்து தரைமட்டமான தமிழ் தாத்தா உ.வே.சா. இல்லம்!

அரசியல், அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், பௌத்தம், மயிலை சீனி. வெங்கடசாமி

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

புத்தம் : ஓர் அறிமுகம் அறிஞர் மயிலை சீனி. வெங்கடசாமி ஆசீவக மதம் பௌத்த, ஜைன, வைதீக மதங்களைப் போலவே, இந்த ஆசீவக மதமும் வட இந்தியாவில் தோன்றியது. இந்த மதத்தை உண்டாக்கினவர் மஸ்கரிபுத்திரர் என்பவர். பாளிமொழியில் இப்பெயர் மக்கலிபுத்த என்று வழங்கப்படுகின்றது. மாட்டுத் தொழுவம் என்று பொருள்படும் 'கோசால' என்னும் அடைமொழி கொடுத்துக் கோசால மக்கலிபுத்த என்றும் இவர் வழங்கப்படுவர். ஏனென்றால், இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று சொல்லப்படுகின்றது. தமிழ் நூல்கள் இவரை மற்கலி… Continue reading மாட்டுத் தொழுவத்தில் பிறந்த மக்கலி உண்டாக்கிய ஆசிவக மதம்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, பௌத்த மதம், மயிலை சீனி. வெங்கடசாமி

பெளத்தர் இயற்றிய முதன்மையான நூல்!

புத்தம் ஓர் அறிமுகம் மயிலை சீனி. வெங்கடசாமி பௌத்தர் இயற்றிய தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகத்தை சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவிலிருந்து அவர்கள் என்னென்ன நூல்களை இயற்றினார்கள் என்பதைப் பார்ப்போம். தமிழில் உள்ள ஐம்பெருங்காப்பியங்கள் பௌத்தர் ஜைனர் என்னும் இரு சமயத்தாரால் இயற்றப்பட்டவை. சிந்தாமணி, சிலப்பதிகாரம் இரண்டும் ஜைனரால் இயற்றப் பட்டன. மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்பன பௌத்தர்களால் இயற்றப்பட்டவை. இந்த மூன்றில் மணிமேகலையைத் தவிர மற்ற இரண்டும் இறந்துவிட்டன. மணிமேகலை ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றென்று கூறப்படுகின்றபோதிலும், இது… Continue reading பெளத்தர் இயற்றிய முதன்மையான நூல்!

அறிஞர் மயிலை. சீனி வெங்கடசாமி, ஆன்மீகம், புத்தம் : ஓர் அறிமுகம், புத்தம்: ஓர் எளிய அறிமுகம்!, மயிலை சீனி. வெங்கடசாமி

புத்தரின் பெயரே சாஸ்தா!

புத்தம் ஓர் அறிமுகம்  மயிலை சீனி.வெங்கடசாமி இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே 'சாத்தன் காவு' என்றும், 'ஐயப்பன் கோயில்' என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். கடந்த சில பதிவுகளில் பெளத்த திருப்பதிகள் பற்றி பார்த்து வருகிறோம். அதன் தொடர்ச்சி... திருப்பாதிரிப்புலியூர் இப்பொழுது கூடலூர்க்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பண்டைக்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை. சங்கமங்கை… Continue reading புத்தரின் பெயரே சாஸ்தா!