அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு, பெண் எழுத்தாளர், பெண்ணியம்

எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் திங்கட்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90. உடல் நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த அவர், சென்னை போரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில், அவர் காலமானார். எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது. இது தொடர்பாக, அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் முன்னோடி பெண் எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் காலமான செய்தியறிந்து மார்க்சிஸ்ட்… Continue reading எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமானார்!

Advertisements
இலக்கியம், எழுத்தாளர்கள், நிகழ்வுகள்

திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

தமிழ் ஸ்டுடியோவும், வம்சி பதிப்பகமும் இணைந்து எதிர்வரும் 12, 13, 14 (வெள்ளி, சனி & ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் சிறுகதை பயிற்சி பட்டறையை நடத்துகிறது. இந்த பயிற்சி பட்டறை குறித்து தமிழ் ஸ்டுடியோ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சிறுகதை எழுதுவதில் உள்ள நுட்பங்கள், சிறுகதைகளை அணுகும் விதம் என இந்த பயிற்சி பட்டறை முழுவதும் உங்கள் எழுத்து கூர்த்தீட்டப்படவிருக்கிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் கலந்துக்கொண்டு பயிற்சியளிக்கவிருக்கும் எழுத்தாளர்கள்: எழுத்தாளர் பிரபஞ்சன் எழுத்தாளர் அழகியபெரியவன் எழுத்தாளர் போப்… Continue reading திருவண்ணாமலையில் பிரபல எழுத்தாளர்கள் நடத்தும் சிறுகதை பயிற்சி பட்டறை

இன்றைய முதன்மை செய்திகள், இலக்கியம், சிறுகதை, பெண்

கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

தரிசனம் கௌதம சித்தார்த்தன் அவன் எனது பிஷப்பை வெட்டி ராஜாவுக்கு செக் வைத்தபோது கதவு தட்டப்பட்டது. எனது கணவராகத்தானிருக்கும். ஆட்டத்தின் சுவாரஸ்யம் சடுதியில் கலைய, நான் அவனைப் பார்த்தேன். அவன் சட்டென எழுந்துபோய் மறைந்து கொண்டான். சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவைத் திறந்தேன். அவர் பதற்றத்துடன் உள்ளே நுழைந்து நாலாபுறமும் கண்களைச் சுழலவிட்டார். சமீப காலமாக என் கணவருடைய கண்களின் இடுக்கில் குரூரம் மின்ன ஆரம்பித்திருக்கிறது. நெற்றிச் சுருக்கங்களிலும், முகத்திலும் சந்தேக… Continue reading கௌதம சித்தார்த்தன் சிறுகதை : தரிசனம்

இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது

ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

இலக்கியம், புத்தக அறிமுகம், புத்தகம், பெண், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

அம்பையால் மட்டுமே இது முடியும்!

புத்தக அறிமுகம் - ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு கவிதா சொர்ணவல்லி "இந்த புக் படிச்சுட்டீங்களா, அந்த புக் படிச்சுட்டீங்களா" என்பது போன்ற மேதமையான கான்வர்சேஷன்களில் பங்கேர்ப்பதிலும் , இல்லை கும்பலாக சேர்ந்து கொண்டு படித்த புக்கை அக்கு வேறு ஆணிவேறாக கிழிப்பதிலோ அல்லது பாராட்டுவதிலோ பெரிதாக ஈடுபாடு இருந்ததில்லை. ஆனால்...ஒரு பார்வையாளராக இருந்து வேடிக்கை பார்த்த இப்படியான புத்தக வாசிப்பு விவாதங்கள் சிலவற்றில், அம்பையை பற்றி சிலாகிக்கும் தருணங்களில் எல்லாம் அவரின் "காட்டில் ஒரு… Continue reading அம்பையால் மட்டுமே இது முடியும்!