சினிமா

விஜய்யுடன் இணையும் ஸ்ருதிஹாசன்: சரித்திர படத்தில் நடிக்கிறார்கள்!

சிம்புதேவன் அடுத்து இயக்கவுள்ள விஜய்யின் படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுபற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஸ்ருதி. இது சரித்திர படமாக உருவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஸ்ருதி, விஷாலுடன் பூஜை படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் மான் கராத்தே, ஒரு கன்னியும் மூன்று களவானிகளும், கூட்டம் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன. ஹிட் ஹீரோவாக கோலிவுட்டில் வலம்வரும் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவரும் படம் மான் கராத்தே. அனிருத்தின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்ட நிலையில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது. படத்தின் நாயகியாக ஹன்சிகா. படத்தை இயக்கியிருக்கிறார் கே. திருக்குமரன். சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவரும் ஒரு கன்னியும் மூன்று களவானிகளும் படத்தில் அருள்நிதி, பிந்துமாதவி, அர்ஷிதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். காமெடிக்கு முக்கியத்துவம்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

சினிமா

இப்படியும் ஒரு படத்தின் தலைப்பு – ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்!

சிம்புதேவன் அடுத்து இயக்கிக் கொண்டிருக்கும் படத்திற்குத்தான் ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் என பெயர் வைத்திருக்கிறார். இதில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கிறார். உதயம் என்எச்4 பட நாயகி ஹர்சிதா ஷெட்டி நாயகியாகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் பிந்து மாதவியும் நடிக்கிறார்கள். மூன்று களவாணிகளில் ஒருவராக நடுவில கொஞ்சம் பக்கத்தைக் கணோம் படத்தில் நடித்த பகவதி பெருமாள் நடிக்கிறார். பெயருக்கு ஏற்றமாதிரி படமும் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.