அரசியல், இந்தியா, தமிழ்நாடு

சிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான விசாரணை 12 மணிக்கு நடைபெறும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. ஆகையால் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.… Continue reading சிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை

அரசியல், தமிழ்நாடு

இன்று தாமிரபரணி தியாகிகள் தினம்!

..ஏனென்றால் அவர்கள் தலித் தொழிலாளர்கள்! ஆர்.கிருஷ்ணன் தமிழ்நாட்டின் ஜீவநதி தாமிரபரணி. 1999 ஜூலை 23ம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு பேரணியாக வருகிறார்கள். ‘இவர்களுக்கு பாடம் புகட்டு’ என மேலிட உத்தரவு கொலை பாதகத்தில் அமலாகிறது. 17 உயிர்கள் பலி. இரண்டரை வயது மகனாவது பிழைக்கட்டும் என நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ரத்தினமேரி, குழந்தை விக்னேஷை தூக்கி தரையில் போடுகிறாள். நீசக் காவலர்கள் அப்பாலகனையும் கொன்று ஆற்றில்… Continue reading இன்று தாமிரபரணி தியாகிகள் தினம்!

இந்தியா, சினிமா, பாலிவுட்\

நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

தமிழில் வெளியான கஜினி படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தி மறுபதிப்பில் நடித்தவர் ஜியா கான். 25 வயதான ஜியா கான், தன்னுடைய மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்திகொண்டார். தற்கொலைக்கு காதல் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடைய காதலன் சுராஜ் பன்சோலியை கைது செய்தது மும்பை காவல்துறை. இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்… Continue reading நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு