அரசியல், சினிமா, தமிழ்நாடு

நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்குச் சென்று பீர் வாங்குவதாக காட்சித் தொகுப்பொன்று இணைய தளங்களில் வெளியாகி்யள்ளது. இணையத்தில் இப்போதைய பேசுபொருளாக இருக்கும் இந்த விடியோ நானும் ரவுடிதான் படத்திற்காக எடுக்கப்பட்டது என்றும், அந்த காட்சியை யாரோ மொபைலில் படம் எடுத்து இணையத்தில் ஏற்றியுள்ளதாகவும் படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ரானும் ரவுடிதான் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்னை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் நயன்தாரா பீர் வாங்கும் காட்சிக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து… Continue reading நடிகை நயன்தாரா பீர் வாங்கும் காட்சி : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

சினிமா

விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

  பிரபல பதிவராக அறியப்பட்ட கேபிள் சங்கர் 'தொட்டால் தொடரும்' படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார். அவரது வலைப்பூ பதிவுகளில் திரைப்பட விமர்சனங்கள் பிரபலமானவை. கறாரானவை. வெட்டு ஒன்று துண்டு இரண்டு ரகத்திலானவை.அதே பாணியில் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். *வலைப்பூக்களில் விமர்சனம் செய்து விட்டால் சினிமா இயக்குநராகி விடலாமா? அதையே தகுதி என நினைத்துக் கொண்டு சினிமாவுக்கு வந்து விடமுடியுமா? நான் சினிமா பற்றி பரவலாக ஒவ்வொரு தளத்திலும் ஆர்வப்பட்டு ஈடுபட்டு தெரிந்து கொண்டுதான் படம் இயக்க… Continue reading விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் எனக்கு உண்டு: இயக்குநர் கேபிள் சங்கர்

சினிமா, தமிழ்நாடு

‘ஐ’ : கொடூர காமெடி!

சிறப்பு கட்டுரை நங்கை அநேகமாக, இதை கவுண்டர் துவங்கி வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். அல்லது அதற்கு முன்பாகவும் இருக்கலாம். அதாகப்பட்டது, ஒரு காமெடியன் போதுமான அளவுக்கோ அல்லது பயங்கரமாகவோ அடி வாங்கவேண்டும். அதைப் பார்த்து அரங்கம் அதிர நாம் சிரிக்கவேண்டும்.  இதுதான், தமிழ் சினிமா நமக்கு கற்றுக்கொடுத்த நகைச்சுவை ரசனை. ஒரு நகைச்சுவை நடிகர், ரத்தம் சொட்டச் சொட்ட அடி வாங்கும்போதோ அல்லது தீயில் கருகி புகை மண்டலமாக நிற்கும்போதோ, நீங்கள் வாய்விட்டு சிரிக்கிறீர்கள் என்றால், நிச்சயம்… Continue reading ‘ஐ’ : கொடூர காமெடி!

சினிமா, Uncategorized

வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி

  சாமி இயக்கத்தில் கங்காரு படத்தில் பாசமுள்ள அண்ணனாக நடித்திருப்பவர் அர்ஜுனா. பொறியியல் பட்டதாரியான இவர் அறிமுகம் ஆனது என்னவோ மலையாளப் படத்தில்தான். ரஞ்சித்குமார் என்ற பெயருடன் மலையாளத்தில் சிறிதும் பெரிதுமாக 15 படங்களில் நடித்திருக்கிறார். 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் கூட த்ரிஷாவின் அண்ணனாக வருபவர் இவர் தான். பரவலாக பல படங்களில் நடித்திருந்தாலும் பெயர் பெறப் போவது வரவிருக்கும்'கங்காரு' தமிழ்ப்படம் மூலம்தான். 'கங்காரு' வில் டைட்டில் ரோலுக்கு தேர்வானது எப்படி..? என்று அர்ஜுனா பற்றிக்… Continue reading வெட்டியான் கேரக்டரில் கூட ஜீன்ஸ் ,ஷூ போட்டு நடிப்பார்கள்: இயக்குநர் சாமி

சினிமா, தமிழ்நாடு

திரையுலகில் 50 ஆண்டுகள்: கே.ஜே.ஜேசுதாஸூக்கு சென்னையில் பாராட்டு விழா

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பின்னணிப் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு வரும் 25-ஆம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த விழாவில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க உள்ளனர். 1964-இல் வீணை எஸ்.பாலசந்தரின் 'பொம்மை' படத்தில் 'நீயும் பொம்மை, நானும் பொம்மை...' என்ற பாடலின் மூலம் திரையுலகில் ஜேசுதாஸ் அறிமுகமானார்.அதைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளில் 50… Continue reading திரையுலகில் 50 ஆண்டுகள்: கே.ஜே.ஜேசுதாஸூக்கு சென்னையில் பாராட்டு விழா