அரசியல், அரசியல் பேசுவோம், சினிமா

அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா!

சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமானவுடன் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவின் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விந்தியா. அதிமுக சார்பாக நடிகர் ராமராஜன், செந்தில், வெண்ணிற ஆடை நிர்மலா, சிங்கமுத்து ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.

இனியா, சினிமா, சினிமா இசை

என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

இந்தியாவில் இதுவரை 586 போலி என்கௌன்டர்  நடந்துள்ளது. தவிர ஆயிரக்கணக்கில் என்கௌன்டர் நடைபெற்றுள்ளது.  மனித உரிமை ஆர்வலர்கள் ஒருபுறம் என்கௌன்டர் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், நடைபெறும் பெருங்குற்றங்களில் இருந்து நாட்டைக் காப்பாற்ற என்கௌன்டர் தேவை என போலிஸ் தரப்பில் வாதாடப்பட்டுக் கொண்டு வருகிறது. என்கௌன்டர் மனித உரிமை மீறலா இலையா என்ற விவாதமே 'வேளச்சேரி' படமாக வளர்கிறது. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக  நடிக்க இனியா வழக்கறிஞர் ஆக நடிக்கிறார். இனியா மனித… Continue reading என்கௌன்டர் மனித உரிமை மீறலா? விளக்கம் சொல்கிறது வேளச்சேரி!

சினிமா, பிந்து மாதவி, விமல்

விமலுடன் மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார் பிந்து மாதவி!

 கொஞ்சம் சினிமா எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ்  தயாரிக்கும் படம் ‘தேசிங்குராஜா’. இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.   கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். துணை கதாபாத்திங்களாக சூரி,சார்லி,சிங்கம்புலி,சிங்கமுத்து,ரவிமரியா,சாம்ஸ் ஆடுகளம் நரேன்,ஞானவேல்,வடிவுக்கரசி,அப்பதா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை  அமைத்து இயக்குகிறார் எஸ்.எழில். கிராமத்து பின்னணியில் காமெடி படமாக உருவாகிறது தேசிங்குராஜா.