இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா

இந்த வார ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் தெனாலிராமன், டமால் டுமீல் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன.   கிட்டத்தட்ட இரண்டு  ஆண்டுகளாக படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நடிகர் வடிவேலு நடித்து வெளிவந்திருக்கும் படம்தெனாலிராமன் . பெரும் பொருட்செலவில் நகைச்சுவை கலந்த சரித்திரப் படமாக தயாராகியிருக்கும் இந்தப் படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன்.

சினிமா

டமால் டுமீல் : முதல் பார்வை

இதுவரை இரண்டாவது ஹீரோவாகவே வலம் வந்த வைபவ், முதன்மையான கதாபாத்திரத்திரத்தில் நடித்திருக்கும் படம் டமால் டுமீல். நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்திருக்கிறார். சார்லி, ஷயாஜி ஷிண்டே, கோட்டா ஸ்ரீனிவாசராவ் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ரீ. இசை தமன். சராசரி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் இளைஞன் வாழ்க்கையில் இரண்டு பேரால் ஏற்படும் திருப்பங்களை படமாக்கியிருக்கிறார் ஸ்ரீ.  

சினிமா, பிந்து மாதவி, விமல்

விமலுடன் மீண்டும் ஒரு காமெடி படத்தில் நடிக்கிறார் பிந்து மாதவி!

 கொஞ்சம் சினிமா எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ்  தயாரிக்கும் படம் ‘தேசிங்குராஜா’. இந்தப் படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.   கதாநாயகியாக பிந்து மாதவி நடிக்கிறார். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். துணை கதாபாத்திங்களாக சூரி,சார்லி,சிங்கம்புலி,சிங்கமுத்து,ரவிமரியா,சாம்ஸ் ஆடுகளம் நரேன்,ஞானவேல்,வடிவுக்கரசி,அப்பதா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை  அமைத்து இயக்குகிறார் எஸ்.எழில். கிராமத்து பின்னணியில் காமெடி படமாக உருவாகிறது தேசிங்குராஜா.