குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

தக்காளி விலை ரூ. 100ஐ எட்டிக்கொண்டிருக்கிறது. தக்காளி இல்லாமல் சமைக்க முடியாது என்கிற நிலைக்கு நம்முடைய சமையல் முறை சென்றுவிட்டது. உண்மையில் தக்காளி சில பத்தாண்டுகளில்தான் இந்திய சமையலில் முக்கியத்துவம் பெற்றது. தக்காளி எப்போது நம் சமையலில் இடம் பெற ஆரம்பித்தது என்கிற ஆய்வை விரைவில் எழுதுகிறோம். அதற்கு முன் அதிகம் தக்காளி பயன்படுத்தாமல் செய்யும் சில சமையல் குறிப்புகளைத் தருகிறோம். அதில் முதலாவதாக புடலை பால் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: புடலங்காய்… Continue reading தக்காளி இல்லாத சமையல் – புடலை பால் குழம்பு

Advertisements
அசைவ சமையல், சமையல், மீன் சமையல்

சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

சன்டே ஸ்பெஷல் காரப்பொடி குழம்பு காரப்பொடி என்பது ஒருவகை மீன். பொடி வகை மீன் என்பதால் காரப்பொடி என பெயர் வந்திருக்கலாம்.பிரசவமான பெண்களுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த இந்த மீனை உண்ணும் பழக்கம் மீனவ மக்களிடம் இருக்கிறது. மற்ற மீன் குழம்புகளைப் போல அல்லாமல் இதை செய்வது வித்தியாசப்படும். பூண்டு மற்றும் மிளகு இதில் சற்றே தூக்கலாக பயன்படுத்துவர். சரி செய்முறைக்குப் போவோம். தேவையானவை: காரப்பொடி - அரை கிலோ மிளகு - 2 தேக்கரண்டி பூண்டு… Continue reading சன்டே ஸ்பெஷல் – காரப்பொடி குழம்பு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறிகளின் வரலாறு –  10 நூல்கோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காய் நூல்கோல். ஜெர்மன் மொழியில் நூல்கோலைக் குறிக்கும் கோல்ராபி (kohlrabi) என்னும் சொல்லுக்கு முட்டைகோஸ் டர்னிப் என்று பொருள். ஒரே இனத்தைச் சேர்ந்த முட்டைகோஸ் மற்றும் டர்னிப் செடிகளின் தண்டுகளை இணைத்து ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்தச் செடி. ஆரம்ப காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இது பயன்பட்டது. சுவையின் காரணமாக இதை மனிதர்களும் உண்ண ஆரம்பித்தனர். அயர்லாந்தில் கிபி 17ம் நூற்றாண்டில் உணவுக்காக முதன்முதலில் பயிரிடப்பட்டது. பிறகு… Continue reading நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

சமையல்

சாதம் வடிப்பது எப்படி?

ருசி காமாட்சி மகாலிங்கம் ப்ரஷர் குக்கர்,  மின்சாரத்தில் இயங்கும்  ரைஸ் குக்கர் இருக்கும்போது,   யார் சாதத்தை வடிக்கிறார்கள்?! முன்பெல்லாம்,  வெண்கலப் பானைகளில் சாதம் வடிப்பது  உண்டு. அதன் கொள்ளவைச் சொல்லியே பாத்திரத்தைக் குறிப்பிடுவார்கள். கால்படி, ஆழாக்கு, அரைப்படி,வெண்கலப் பானைகள், உருளிகள், கோதாவரிகுண்டு,   போசிகள்,  தவலைகள் என  பல தினுஸுகளில்,பெயரிட்டு அழைக்கப்படும். குறிப்பிடப்படும். அந்தந்த அளவுகளில்   அரிசியைச் சேர்த்து சாதம் சமைக்கப்படும். மண் பானைகளிலும்  சமைப்பவர்கள் அதிகம் உண்டு. எந்த ட்ரேட்மார்க்  எந்த பெயர் குக்கர் என்பதுதான் இப்போதைய… Continue reading சாதம் வடிப்பது எப்படி?

ஃபுட் ஸ்டைலிங், இதுக்கு பேளே சாரு, சமையல், சீசன் சமையல், முன் பனிகால சிறப்பு உணவுகள்

சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கர்நாடக மாநிலத்திலும் வயல் அவரைக்காய் என்று சொல்லப்படுகிற மொச்சைக்காய் ரொம்பவும் பிரசித்தமானது.  முன் மற்றும் பின்பனிகாலத்தில் இந்தப் பகுதி மக்களின் உணவில் வயல் அவரைக்காய் பிரதான இடம் வகிக்கிறது. இனிப்பு, காரம் என விதவிதமான சுவைகளில் இந்த ஒரு காய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் விதைகளை வைத்து இந்தப் பகுதி மக்கள் சமைக்கிறார். அதில் ஒரு ருசியான ரெசிபி இதோ நீங்களும் செய்து பார்த்து ருகிக்க... இதுக்கு பேளே சாரு (பிதுக்கம் பருப்பு… Continue reading சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!