இலக்கிய விருது, இலக்கியம், சினிமா

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் கதைதான் கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இதுவரை 1லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது. லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள்… Continue reading 23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

Advertisements
அஞ்சலி, இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள்

ஜெயகாந்தன் மறைந்தார்!

ஞா.கலையரசி   தமிழ் இலக்கிய உலகில் ஜே.கே என்று அழைக்கப்பட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் (1934 – 2015) 08/04/2015 அன்று சென்னையில் காலமானார். இவர் மறைவுக்குத் தலைவர்களும், திரையுலகப் பிரபலங்களும், ‘எழுத்துலகச் சிற்பி,’ ‘சிறுகதை இலக்கியத்தின் முடிசூடா மன்னன்,’ ‘தமிழ் இலக்கிய ஒளிச்சுடர்,’ ‘படிக்காத மேதை,’ ‘முற்போக்குச் சிந்தனைவாதி,’ ‘தமிழ் இலக்கிய பிதாமகன்,’ என்றெல்லாம் புகழாரம் சூட்டிக் கண்ணீரஞ்சலி செலுத்தியுள்ளனர். கடலூரில் வேளாண்குடும்பத்தில் பிறந்து ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், இலக்கியத்துக்கான மிக உயர்ந்த… Continue reading ஜெயகாந்தன் மறைந்தார்!

இலக்கியம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

தமிழின் முதன்மையான இலக்கிய வாசகர் திகசி மறைவு!

முற்போக்கு இலக்கிய முன்னோடியாக விளங்கிய திகசி என மூன்றெழுத்துக்களால் தமிழ் படைப்புலகில் முத்திரைபதித்த தி. க. சிவசங்கரன் மறைவு (25-03-2014)க்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு. வெங்கடேசன் ஆகியோர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தி. பள்ளிப்பருவத்திலேயே பாரதியாரின் தேசபக்திப் பாடல்களால் ஈர்க்கப்பட்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் பங்கேற்ற திருநெல்வெலி கணபதி சிவசங்கரன் கவிதைகள் எழுதுவதிலேயே முதலில் கவனம் செலுத்தினார். எழுத்து எமக்குத் தொழில் என்று… Continue reading தமிழின் முதன்மையான இலக்கிய வாசகர் திகசி மறைவு!