அரசியல், இலக்கியம், சர்ச்சை, தமிழ்நாடு

எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை

  எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான். பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக்… Continue reading எழுத்தாளர் பெருமாள்முருகன் என்பவனுக்காக பெ.முருகன் அறிக்கை

இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை, தமிழ்நாடு

முடிவுக்கு வரும் எழுத்தாளர் பெருமாள்முருகனின் மாதொருபாகன் சர்ச்சை!

எழுத்தாளர் பெருமாள்முருகன், மாதொருபாகன் நாவலில் சர்ச்சைக்குரிய விதத்தில் எழுதியதாக இந்து அமைப்புகளால் கடும் ஆட்சேபத்துக்கு உள்ளானார். இதை முடித்து வைக்கும்விதமாக பெருமாள் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 'கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை ஆகியவற்றை எழுதி வருகிறேன். என் நூல்கள் பல்வேறு விமர்சகர்களாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும் நல்லவிதமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. இலக்கியத்திற்கு என வழங்கப்படும் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றிருக்கிறேன். கொங்குப் பகுதியில் வழங்கும் சொற்களைத் தனி ஒருவனாகத் தொகுத்துக் ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’யை… Continue reading முடிவுக்கு வரும் எழுத்தாளர் பெருமாள்முருகனின் மாதொருபாகன் சர்ச்சை!

இன்றைய முதன்மை செய்திகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு

ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்

மகாபாரத்தை நாவல் வடிவில் எழுதுவதன் மூலம், திரைத் துறையில் நானும், கமல்ஹாசனும் செய்ய முடியாததை எழுத்துத் துறையில் ஜெயமோகன் சாதித்துக் காட்டி உள்ளார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியுள்ள நிலையில் விமர்சகர் ஞாநி நாவல் குறித்து முரண்பட்ட கருத்தை வெளியிட்டிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் "வெண்முரசு' எனும் பெயரில் மகாபாரதத்தை நாவல் வடிவில் எழுதி வருகிறார். மொத்தம் 30 ஆயிரம் பக்கங்களில், 30 நாவல்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நாவல் வரிசையாக "வெண்முரசு' எதிர்காலத்தில் விளங்க வேண்டும்… Continue reading ஜெயமோகனின் வெண்முரசு: இளையராஜாவின் புகழாரமும் ஞாநியின் விமர்சனமும்

அறிவியல், சர்ச்சை

நிலவில் மனித உருவம்: விடியோ ஆதாரம் உண்மையா?

http://www.youtube.com/watch?v=7QdYvelStn8 சமீபத்தில் நிலவில் ஒரு வேற்றுக் கிரகவாசி இருப்பதுபோல் தெரிந்த வீடியோ பதிவு மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால், அங்கு வேற்றுக் கிரகவாசிகள் வசிக்கிறார்களா என்று விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களுக்கும் சந்தேகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த வீடியோ பதிவில் தெரியும் புகைப்படம் வெறும் தூசியோ அல்லது புகைப்பட நெகட்டிவில் ஏற்பட்ட கீறலோதான் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விளக்கம் அளித்துள்ளது. Wowforreel என்ற யூ-ட்யூப் தளத்திலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த இந்த வீடியோ… Continue reading நிலவில் மனித உருவம்: விடியோ ஆதாரம் உண்மையா?

அரசியல், இந்தியா, சர்ச்சை

பெண் எம்.பியின் தைரிய பேச்சு: தேசத்துரோக வழக்கு பாய்ந்தது!

தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த மக்களவை எம்.பி கவிதா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகளும், நிஜாமாபாத் தொகுதி எம்.பி.யுமான கவிதா, சில தினங்களுக்கு முன் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், தெலங்கானாவும், ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் பகுதிகளாக இருந்ததில்லை என்றும் கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் அவற்றை இணைத்துவிட்டதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையொட்டி நீதிமன்ற… Continue reading பெண் எம்.பியின் தைரிய பேச்சு: தேசத்துரோக வழக்கு பாய்ந்தது!