சமூகம், பெண்

குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

சென்னை பெரியமேட்டில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்காக சாலையில் நின்றிருந்தோம். அப்போது அருகில் இருந்த டீக்கடையில் ஒரு பெண்மணி, அவசர அவசரமாக டீயை குடித்துக் கொண்டிருந்தார். நின்றிருந்த ஆட்டோ யாருடையது என்று கேட்பதற்குள், ஆட்டோவில் உட்கார்ந்து, காக்கி சட்டையை மாற்றியதும்தான் தெரியும். அந்த பெண்மணி ஆட்டோ ஓட்டுனர் என்று. அவர் பெயர் உமா மகேஸ்வரி. இதோ அவர் ஆட்டோ ஓட்ட வந்த காரணத்தை கேளுங்கள்... "வழக்கம்போல குடிதான் சார்.... என் வூட்டுகாரு டெய்லி குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவான். வேலைக்கும்… Continue reading குடியில் வீழ்ந்த கணவன்; குடும்பத்தைக் காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் மனைவி!

இந்தியா, உலகம், சமூகம்

இந்திய காவல்துறை பெண் அதிகாரிக்கு ஐ.நா.வின் அமைதிக் காப்பாளர் விருது

ஐ.நா.வின் சர்வதேச பெண்கள் காவல்துறையின் அமைதிக் காப்பாளர் விருது இந்திய காவல்துறை பெண் அதிகாரி சக்தி தேவிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐ.நாவின் அமைதிப் பணியில் இணைந்து பணியாற்றி வரும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சக்தி தேவி. இவர் தற்போது ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வருகிறார். ஆப்கானிஸ்தானில் நடந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதில் தலைசிறந்த பணியை ஆற்றியதற்காக சக்தி தேவிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

குற்றம், சமூகம், தமிழ்நாடு

கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சகவீரர்கள் சேலத்தைச் சேர்ந்த கணேசன், விருதுநகரைச் சேர்ந்த சுப்புராஜ், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோகன் சிங் ஆகியோர் பலத்த குண்டடி பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் கோவர்தன்சிங், பிரதாப்சிங் ஆகியோர் பலத்த காயத்துடன் கல்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.  துப்பாக்கி சூடு நடத்திய வீரர் விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அணு… Continue reading கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் பலி

இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சமூகம், பெண், பெண்ணியம்

கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர்.  பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங்களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த… Continue reading கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

பெண், பெண் இயக்குநர், பெண்களின் சுகாதாரம், பெண்ணியம்

மாதவிடாய் குறும்படம் அறிமுகம்

 எழுத்து: இரா.உமா “எந்நாடு போனாலும் தென்னாடுடைய சிவனுக்கு மாதவிலக்கான பெண்கள் மட்டும் ஆவதே இல்லை” - கவிஞர் கனிமொழி மாதவிலக்கு எனப்படும் மாதவிடாய் குறித்து ஓர் ஆவணப்படம் வெளிவந்திருக்கிறது. கீதா இளங்கோவன் அந்த ஆவணப்படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். புனிதங்களும், தீண்டாமைகளும் உடைத்து நொறுக்கப்பட்டுக் கொண்டிருக் கின்ற சூழலில், பெண்ணின் மீது இந்தச் சமூகம் ஏற்றி வைத்திருக்கின்ற தீண்டாமையான மாதவிடாய் பற்றிய கருத்தாக்கங் களையும், மருத்துவர்களின் அறிவியல் சார்ந்த ஆலோசனைகளையும் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறார் கீதா. இதில் இடம்… Continue reading மாதவிடாய் குறும்படம் அறிமுகம்