சினிமா

சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’!

இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது.  ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது.அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்றுவிடுமுறை'. இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும் என்கிறது படக்குழு. நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது.… Continue reading சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’!

இசை வெளியீடு, இசையமைப்பாளர், சினிமா

தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி: முதல் பார்வை

தனுஷ்,  அமலா பால் நடித்த வேலையில்லா பட்டதாரி, தனுஷ் நடிக்கும் 25 வது படம். ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கிறார். சென்ற வாரம் படத்தின் இசை வெளியீடு நடந்தது. படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்திருக்கும் நிலையில் ஜூலை 18ம் தேதி படம் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.