சினிமா

வனிதா விஜயகுமார் – நடன இயக்குநர் ராபர்ட் திருமணம்?

சினிமா வட்டாரத்தில் இப்போதைய பரபரப்பு செய்தி நடன இயக்குநர் ராபர்ட்டும் நடிகை வனிதா விஜயகுமாரும் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பதுதான். இதற்கெல்லாம் முடிவு கட்டும் வகையில் இருவரும் இணைந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் ’’நாங்கள் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இருவரும் நல்ல நண்பர்கள், நாங்கள் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறோம். அதன் வெற்றிக்குப் பிறகு, முறைப்படி எல்லோரும் தெரிந்து நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்’’ என்று அறிவித்திருக்கிறார்கள்.  

கோலிவுட், சினிமா, விஜய் சேதுபதி

ஐஸ்வர்யாவையும் என்னையும் இணைத்து பேசுவது கொடூரமானது! – விஜய் சேதுபதி

கோலிவுட்டில் ஒரு நடிகர் சில ஹிட் படங்களைக் கொடுத்தால் அவரை வீழ்த்த பயன்படுத்தப்படும் ஆயுதம் அவர் இமேஜை காலி செய்யும் வகையில் கிசுகிசு கிளப்பிவிடுவது. அதற்கு லேட்டஸ்டாக மாட்டியிருப்பவர் விஜய் சேதுபதி. ரம்மி படத்தில் அவருக்கும் இணையாக நடித்த ஐஸ்வர்யா, பண்னையாரும் பத்மினியும் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த ஒரே காரணத்தால் ஐஸ்வர்யாவையும் விஜய் சேதுபதியையும் இணைத்து ஒரு வார இதழ் கிசுகிசு எழுதியது. இதுபற்றி விஜய் சேதுபதியிடம் கேட்டோம்... ‘‘சினிமாத்துறையில் இது ரொம்ப கொடூரமான விஷயம்.  பொதுவாக கிசுகிசு வந்தால்… Continue reading ஐஸ்வர்யாவையும் என்னையும் இணைத்து பேசுவது கொடூரமானது! – விஜய் சேதுபதி