கோலம், கோலம் போடுவது எப்படி

மார்கழி கோலங்கள் 2017!

மார்கழி உங்கள் வீட்டு வாசலை அலங்கரிக்க சில கோலங்கள் இங்கே.. கோலமிட்டவர்: பிரியா தரேசானி

கோலம், கோலம் போடுவது எப்படி

பூக்கூடை கோலம்!

புள்ளிக் கோலங்கள் நான்கு பூக்கூடைகள் இணைந்தது போன்ற இந்த கோலம் மிக அழகாக உருவாக்கப் பட்டிருக்கிறது. எட்டுப் புள்ளி எட்டு வரிசை நேர்ப்புள்ளியாக வைத்து, நான்கு பக்கமும் படத்தில் உள்ளதுபோல் புள்ளி வையுங்கள். இந்தக் கோலத்தைப் போட்டு முடித்து விட்டு கோலத்தைச் சுற்றிலும் ஒரு வரிசை புள்ளி வைத்து பார்டர் கோலத்தைப் போடுங்கள்.

கோலம், கோலம் போடுவது எப்படி

ஊஞ்சல் கோலம்!

ஊஞ்சல் கோலம் எளிமையான ஊஞ்சல் கோலம் இது. படத்தைப் பார்த்து புள்ளி வைத்து இணைக்கவும்.

கோலம், கோலம் போடுவது எப்படி, செய்து பாருங்கள், மார்கழி கோலம்

மார்கழி ஸ்பெஷல் – பவுத்திர கோலம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட கோலப் புத்தகம் ஒன்றில் பார்த்த கோலம் இது. பவுத்திரம் என்பதற்கு அடுத்தடுத்து வரும் வட்ட வடிவ வடிவிலான கட்டிகள் என்று பொருள். இந்தக் கோலத்தில் அடுத்தடுத்து, ஒன்றையொன்றை ஒட்டியபடி வட்ட வடிவங்கள் வருவதால் பவுத்திர கோலம் என்று பெயர் வைத்திருக்கலாம். மிகவும் அழகான கோலம் இது. நேர்புள்ளி, இடைப்புள்ளி என மாறிமாறி புள்ளிகள் இட்டு, நேர்த்தியாக அவற்றை இணைத்து உருவாக்கும் கோலம். படத்தைப் பார்த்துதான் புள்ளி வைக்க முடியும். எல்லாமே மனக்கணக்குதான்.… Continue reading மார்கழி ஸ்பெஷல் – பவுத்திர கோலம்

கோலம், கோலம் போடுவது எப்படி, மார்கழி கோலம்

மார்கழி கோலம் – ஒரு வரிசை புள்ளியில் பலவிதங்களில் கோலம்!

மார்கழி கோலம் நம்மில் பலருக்கு பெரிய பெரிய கோலங்களைக் கூட அனாயசமாகப் போடும் திறமை இருக்கும். ஆனால் எல்லை கோலங்கள் போடுவது சிரமமான விஷயமாக இருக்கும். ஒரே வகையான கோலத்தையே திரும்ப திரும்ப போட்டுக் கொண்டிருப்போம். இதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அது நீங்களே கோலங்களை உருவாக்குவதுதான். உதாரணத்துக்கு, ஒரு வரிசை புள்ளியில் எத்தனை வகையான கோலங்களை உருவாக்கலாம் பாருங்கள்...