காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கொத்தவரைக்காய் பொரியலுடம் கொஞ்சம் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 23 கொத்தவரைக்காய் கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம். வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கு முன்பே ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து சிலவகை தாவரங்கள் தெற்காசிய கண்டாத்திற்கு இடம்பெயர்ந்ததைப்போல கொத்தரையின் தாய் செடியும் இடம்பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வறிஞர்கள். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம்கண்டு பயன்படுத்தியது இந்திய, பாகிஸ்தான் பகுதிகளில்தான். குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம்தான் இப்போது கொத்தவரை சாகுபடியில் முந்நிலை வகிக்கும் பகுதியாக உள்ளது. சமையலுக்காக பயன்படுத்துவதைக் காட்டிலும்… Continue reading கொத்தவரைக்காய் பொரியலுடம் கொஞ்சம் வரலாறு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?

காய்கறிகளின் வரலாறு –  12 வாழைக்காய் பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்ட முக்கனிகளில் மூன்றாவது கனி வாழை. சமூக கலாச்சாரத்தோடு தொடர்பு படுத்தப்பட்ட காய்கனி வகைகளில் வாழை முதன்மையானது. வாழையின் பூர்வீகம் தென்கிழக்கு ஆசியா மற்றும் பப்புவா நியூகினியா என்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தப் பகுதிகளில் மனிதர்கள் விவசாயம் செய்ய ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து வாழையை பயிரிட்டமைக்கான தொல்பொருள் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வாழையின் இலை முதல், பூ, காய், கனி, தண்டு என அனைத்தையும் தொன்றுதொட்டு பயன்படுத்தியிருக்கிறார்கள் தென்னக மக்கள். வாழையை அதிக… Continue reading நேந்திரங்காய் சிப்ஸ் போடுவது எப்படி?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சர்ச்சையைக் கிளப்பும் தேங்காயின் பூர்வீகம்!

காய்கறிகளின் வரலாறு –  11 தேங்காய் பனை மரக் குடும்பத்தைச் சேர்ந்தது தென்னை. நாடுபிடிக்கச்சென்ற போர்த்துகீசியர்களே இதனை மேற்குலகுக்கு அறிமுகப்படுத்தினர். ஆங்கிலத்தில் கோகனட் என்ற சொல்லின் வேர் கோகோ என்ற போர்த்துகீசிய மொழியிலிருந்து தோன்றிதே. தலை அல்லது மண்டை ஓடு என்பது இதன் பொருள். தென்னையின் பூர்வீகம் எது என்பதில் இன்னும் தெளிவான ஆய்வு முடிவுகளை சொல்ல முடியவில்லை. லத்தீன் அமெரிக்கா இதன் பூர்வீகமாக இருக்கலாம் என்றாலும் இந்தோ பசிபிக் பகுதி மற்றும் தெற்காசிய பகுதிகளே இதன் பூர்விகமாக… Continue reading சர்ச்சையைக் கிளப்பும் தேங்காயின் பூர்வீகம்!