குரோஷா, குரோஷாவில் பூக்கள், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பின்னல் கலை

நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

என்னென்ன தேவை? 20 பால் அளவு நூல், குரோஷா ஊசி எண் 0.75 எப்படி செய்வது? முதலில் எட்டு செயின் பின்னல்களைப் போட்டுக் கொள்ளுங்கள். இறுதியாக போட்ட எட்டாவது செயினை முதல் செயினுடன் இணைத்து டபுள் பின்னல் போடுங்கள். இப்போது இது சிறிய வட்ட வடிவத்திற்கு வந்திருக்கும். இந்த வட்ட வடிவத்தை வைத்து, 25 ட்ரிபிள் பின்னல்களைப் போடுங்கள். ட்ரிபிள் பின்னல்களைப் போடும்போது செயின் பின்னல்களால் உருவாக்கிய வட்ட வடிவத்துக்குள்தான் ஊசியை நுழைக்க வேண்டும். செயின் பின்னல்களுக்குள்… Continue reading நீங்களே செய்யலாம் குரோஷாவில் பூக்கள்

Advertisements
எம்பிராய்டரி, குரோஷா, செய்து பாருங்கள், தையல் கலை, நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களும் பின்னலாம் குரோஷா!

  காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்களான நம் பாட்டியும் தாத்தாவும் தங்களுக்கு ஆடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை! அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று… Continue reading நீங்களும் பின்னலாம் குரோஷா!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழைக் கொண்டுவந்துள்ளோம். இதழின் பெயர் ‘செய்து பாருங்கள்’.  முதல் இதழான ஜனவரி-மார்ச் 2017 இதழில் எம்பிராய்டரி, ஃபேப்ரிக் பெயிண்டிங், குரோஷா, சோப் மேக்கிங், சாக்லேட் மேக்கிங், ஃபேஷன் ஜுவல்லரி, ஒரிகாமி என பல பிரிவுகளில் 20க்கும் அதிகமான கைவினைப் பொருட்கள் செய்முறை குறிப்புகள் விளக்கமாக தரப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்தவ விருப்பமுள்ளவர்களை நிச்சயம் இதழ் ஏமாற்றாது. இதழின் விலை ரூ. 150. ஆன் லைனில் வாங்க இதழ் தேவைப்படுகிறவர்கள் S. Nandhini… Continue reading செய்து பாருங்கள்: தமிழில் கைவினைப் பொருள் செய்முறைக்கான முதல் இதழ்!

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். http://www.youtube.com/watch?v=UE_3y7PbwGI தமிழகம் முழுக்க கல்லூரி,… Continue reading சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

ஃபேஷன் ஜுவல்லரி, எம்பிராய்டரி, எம்பிராய்டரி கற்கலாம் வாங்க, குரோஷா, குரோஷா பின்னல், செய்து விற்கலாம், தொழில், தொழில் தொடங்க ஆலோசனை, நீங்களும் செய்யலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே செய்யலாம்

உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?

முன்பெல்லாம் ஒரு கலைப் பொருளை செய்தால், அதைச் செய்த நாமே அழகு பார்த்துக் கொண்டிருப்போம். விற்பனைக்கு அனுப்புவது பற்றியெல்லாம் நம்மால் யோசிக்கவே முடியாது. நாம் உருவாக்கிய கலைப் பொருள் போலவே நம்முடைய கனவுகளும் மூலைக்குப் போய்விடும். இந்த சூழல் இப்போது மெல்ல மெல்ல மாறிவருகிறது. அமைந்தகரையில் இருந்தபடியே நீங்கள் உருவாக்கிய பொருளை அமெரிக்காவிலோ ஆஸ்திரேலியாவிலோ விற்றுவிட முடியும். எப்படி என்பவர்கள் மேற்கொண்டு படிக்கவும். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் புதுமையான ஆன்லைன் வர்த்தக மையத்தை ஏற்படுத்தியிருக்கிறது etsy.com.… Continue reading உங்கள் கலைப்பொருளை வெளிநாடுகளில் விற்க விருப்பமா?