சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

வடாம் போடலாம் வாங்க – 3 காமாட்சி மகாலிங்கம் பெயர்தான்  மோர் மிளகாயே தவிர மிளகாய் ஊறுவதென்னவோ தயிரில்தான். ஊறுகாய் மிளகாயென்ற ஒரு பெயரும் உண்டு. எண்ணெயில் வறுத்துச் சாப்பாட்டு வகைகளுடன் சாப்பிட ஏற்றது. தஞ்சாவூர் குடமிளகாய் வகையில் செய்தோமானால் மிகவும் அருமையாக இருக்கும். இவ்விடம் சென்னையில் குட்டிக் குட மிளகாய் கிடைத்தது. பச்சை மிளகாயிலும், குடமிளகாயிலும் மோர் மிளகாய் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வந்திருக்கிறேன். வேண்டியவை: குடமிளகாய் - 3 டம்ளர்கள் தயிர் (கெட்டியானது) -… Continue reading சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறிகளின் வரலாறு –  10 நூல்கோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காய் நூல்கோல். ஜெர்மன் மொழியில் நூல்கோலைக் குறிக்கும் கோல்ராபி (kohlrabi) என்னும் சொல்லுக்கு முட்டைகோஸ் டர்னிப் என்று பொருள். ஒரே இனத்தைச் சேர்ந்த முட்டைகோஸ் மற்றும் டர்னிப் செடிகளின் தண்டுகளை இணைத்து ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்தச் செடி. ஆரம்ப காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இது பயன்பட்டது. சுவையின் காரணமாக இதை மனிதர்களும் உண்ண ஆரம்பித்தனர். அயர்லாந்தில் கிபி 17ம் நூற்றாண்டில் உணவுக்காக முதன்முதலில் பயிரிடப்பட்டது. பிறகு… Continue reading நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு

ஸ்பானியர்களுக்குப் பிடித்த குடமிளகாய் இந்தியாவுக்கு வந்த கதை!

காய்கறிகளின் வரலாறு –  5 குடமிளகாய் தென் அமெரிக்க நாடான சிலி மிளகாயின் தாயகம். மிளகாயின் ஒரு வகையான குடமிளகாயின் பூர்வீகமும் அதுவே. தென் அமெரிக்க கண்டத்தை ஆக்கிரமித்திருந்த ஸ்பானியர்கள் உருளைக்கிழங்கு, மக்காள்சோளம், பீன்ஸ் இவற்றோடு மிளகாயையும் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தினர். போர்த்துக்கீசியர் மூலம் மிளகாய் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் ஆப்பிரிக்காவிலும் அறிமுகமானது. காரச்சுவைக்காக மிளகாயின் பெரும்பாலான வகைகள் பயன்படுகின்றன.  தனிச்சிறப்பான மணத்திற்காகவும் காரச் சுவை குறைவாக இருப்பதாலும் குடமிளகாய் மட்டும் ஒரு காய்கறியாக உணவுத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.… Continue reading ஸ்பானியர்களுக்குப் பிடித்த குடமிளகாய் இந்தியாவுக்கு வந்த கதை!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

உருளைக்கிழங்கு கேப்ஸிகம் க்ரேவி

ருசி காமாட்சி மகாலிங்கம் ரொட்டி,பூரி,தோசைகளுடன் சாப்பிட ருசியாக இருக்கும். குடமிளகாய் என்றால் தஞ்சாவூர் குடமிளகாய் ஞாபகம் வருகிறது. அதனால் கேப்ஸிகம் என்று எழுதுகிறேன். ஒரு காலத்தில் பெங்களூரில் மாத்திரம் இது கிடைக்கும். இப்போது எங்கும் கிடைக்கிறது. சட்டென்று இது ஞாபகத்திற்கு வரவே இதை எழுதுகின்றேன். பொங்கலெல்லாம் கொண்டாடி ஆடிப்பாடி, ஓடிக் களைத்திருப்பீர்கள். இந்த கேப்ஸிகம் க்ரேவி செய்து தோசையுடன் கூட ருசிக்கலாம். சட்னிக்கு ஒரு தினம் ஓய்வு கொடுங்கள். ரொட்டி, பூரிக்கு மேச்சிங் சொல்லவே வேண்டாம். வாருங்கள்… Continue reading உருளைக்கிழங்கு கேப்ஸிகம் க்ரேவி