இலக்கிய விருது, இலக்கியம்

எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கனடாவிலிருந்து இயங்கும் தமிழ் இலக்கிய தோட்டம் என்கிற அமைப்பு வருடந்தோறும் சிறந்த தமிழ் இலக்கிய பங்களிப்பாளர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இதில் இந்த வருடத்துக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார் சூழலியல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன். இவர் சூழலியல் பற்றி மட்டுமல்லாது சினிமா தொடர்பான கட்டுரைகளையும் பல்வேறு இதழ்களில் எழுதிவருகிறார். தாராபுரத்தில் பிறந்த சு. தியடோர் பாஸ்கரன், தபால் துறையில் பணிபுரிந்து தலைமை தபால் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய நூல்கள் சில...   மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)… Continue reading எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

சினிமா, புத்தக அறிமுகம், புத்தகம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!

குட்டிரேவதி இந்தப் புத்தகக்காட்சி(2014)க்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு என வடிவங்களும் விரிந்துள்ளன. இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால்… Continue reading புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!