தமிழ்நாடு

கந்துவட்டி புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்!

சென்னையில் கந்துவட்டி கொடுமை அதிகரித்து வருவதாகப் புகார் கூறப்படுகிறது. கந்துவட்டி தொடர்பான புகார்களை பொதுமக்கள் காவல்துறையிடம் எளிதாகத் தெரிவிக்கும் வகையிலும், அந்தப் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் சென்னை பெருநகர காவல்துறை 044-25615086 என்ற தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கலாம். மேலும் இந்த எண்ணுக்குத் தெரிவிக்கப்படும் புகார்கள், உடனடியாக ஆணையர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படுவதால், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை… Continue reading கந்துவட்டி புகார் தெரிவிக்க காவல்துறை தொலைபேசி எண்!

அரசியல், இந்தியா, பெண், பெண்கள் பாதுகாப்பு

‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி

பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவும் ‘நிர்பயா’ மையங்களை நாடு முழுவதும் தொடங்குவதற்கு அந்தந்த மாநில அரசுகளின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி கூறினார். ஒரு நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருக்கும் மேனகா காந்தி செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தார். மேலும் அவர்,‘பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு மருத்துவ உதவி, காவல்துறை உதவி, மன நல ஆலோசனை, சட்ட உதவி மற்றும் தாற்காலிக தங்குமிடம் ஆகியவற்றை ஒரே இடத்தின் கீழ்… Continue reading ‘நிர்பயா’ மையம் மாநில அரசின் ஒப்புதலுக்கு காத்திருக்கிறது: மேனகா காந்தி