குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

அரிசியில் இட்லி, தோசை மட்டும்தான் எப்போதும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதோடு, அரிசி மாவு தயாரிக்க உளுந்து, ப. அரிசி, பு. அரிசி தேவைப்படும் பொருட்களும் அதிகம் இவற்றுக்கு தொட்டுக்கொள்ள ஏதாவது கட்டாயம் செய்தாக வேண்டும். அதற்கு மாற்றாக அதே நேரம் சத்து நிறைந்த ஒன்றாக கொழுக்கட்டை உள்ளது. இதை செய்வது இட்லி தோசையைவிட எளிது. இதோ அந்த எளிய செய்முறை. முதலில் அரை கிலோ பச்சரிசியை கழுவி நன்றாக நிழலில் உலர்த்திக் கொள்ளுங்கள். உலர்ந்ததை மெஷினில்… Continue reading இனிப்பு பூரண கொழுக்கட்டை: எளிய செய்முறை

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறிகளின் வரலாறு – 28 முட்டைகோஸ் போர்த்துக்கீசியர்களால் 14 அல்லது 17ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட காய் முட்டைகோஸ். வரலாற்றாசிரியர்கள் முட்டைகோஸின் பிறப்பிடம் பாறை மலைகள் சூழ்ந்த ஐரோப்பிய பிரதேசங்களாக இருக்கலாம் என்கிறார்கள். ஐரோப்பியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காய்கறி என்றாலும் இன்று சீனாவுக்கு அடுத்தபடியாக முட்டைகோஸ் விளைச்சலில் இந்தியா இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அதேபோன்று இந்திய உணவுகளிலும் முட்டைகோஸ் தவிர்க்கமுடியாத இடத்தைப் பிடித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். எது நல்ல முட்டைகோஸ்? முட்டைகோஸ் விளையும்போது பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது.… Continue reading முட்டைகோஸ் மசாலா கூட்டு!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறிகளின் வரலாறு – 24 பலாக்காய் முக்கனிகளுள் ஒன்றாக வரலாற்று காலம் முதல் தென்னக மக்களால் கொண்டாடப்பட்ட பலா. அதனால் தெரிந்துகொள்ளலாம் பலாவின் பூர்விகம் நம்மண்ணே என்று. 6லிருந்து 7ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே பலாவை உணவுப்பொருளாக பயன்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய மழைக்காடுகளில் வளரும் மரம் பலா. இதன் கனியின் சுவையை அறிந்துகொண்ட மனிதர்கள், அதை உணவுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தனர். தென்னகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பலா… Continue reading கோடை ஸ்பெஷல் – பலாக்காய் கூட்டு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

கொத்தவரைக்காய் பொரியலுடம் கொஞ்சம் வரலாறு

காய்கறிகளின் வரலாறு – 23 கொத்தவரைக்காய் கொத்தவரை, ஆப்பிரிக்க காட்டு வகை செடியிலிருந்து மேம்பட்ட ஒரு வகை தாவரம். வரலாற்றுக்கு முந்தைய காலத்திற்கு முன்பே ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து சிலவகை தாவரங்கள் தெற்காசிய கண்டாத்திற்கு இடம்பெயர்ந்ததைப்போல கொத்தரையின் தாய் செடியும் இடம்பெயர்ந்திருக்கலாம் என்கிறார்கள் ஆய்வறிஞர்கள். உண்ணக்கூடிய ஒரு காயாக இனம்கண்டு பயன்படுத்தியது இந்திய, பாகிஸ்தான் பகுதிகளில்தான். குறிப்பாக இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ராஜஸ்தான் மாநிலம்தான் இப்போது கொத்தவரை சாகுபடியில் முந்நிலை வகிக்கும் பகுதியாக உள்ளது. சமையலுக்காக பயன்படுத்துவதைக் காட்டிலும்… Continue reading கொத்தவரைக்காய் பொரியலுடம் கொஞ்சம் வரலாறு

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்