இலக்கிய விருது, இலக்கியம், தமிழ்நாடு, விருது

ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக செந்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி 2013-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நிஜந்தன் எழுதிய என் பெயர், ஏக்நாத் எழுதிய கொடை காடு ஆகிய நாவல்கள் ஜெயந்தன் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சிறந்த நாடக நாவலுக்கான விருது க.செல்வராஜ் எழுதிய நரிக்கொம்பு நாவலுக்கும், புதிய மாதவி எழுதிய பெண் வழிபாடு, ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் ஆகிய நூல்கள்… Continue reading ஏக்நாத், நிஜந்தன், புதிய மாதவி, ஜெயந்தி சங்கர், திலகபாமாவுக்கு ஜெயந்தன் நினைவு விருது!

அறிவிப்பு, இலக்கியம்

பாரதிதாசனின் 125வது பிறந்த நாள் விழாவில் கவிதையாற்ற விருப்பமா?

புதுச்சேரியில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் 1,250 கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கம் எதிர்வரும் ஏப்ரல் 29-ம் தேதி 2015 ல் நடைபெறவுள்ளது. இந்த கவியரங்கத்தில் பங்கேற்க விரும்பும் கவிஞர்கள் தொடர்பு கொள்ளலாம் என பாரதிதாசன் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கோ.பாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில், பாவேந்தர் பாரதிதாசனின் 125-ஆவது பிறந்தநாளை புதுச்சேரி மற்றும் தமிழக அரசும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். அவர் விரும்பிய தமிழ் மேம்பாடு, தாய்மொழிக் கல்வியை அரசு கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.… Continue reading பாரதிதாசனின் 125வது பிறந்த நாள் விழாவில் கவிதையாற்ற விருப்பமா?

இலக்கிய விருது, இலக்கியம், எழுத்தாளர்கள், புத்தகம், விருது

சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு!

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் 2-ஆம் தேதி சிறந்த எழுத்தாளர்களுக்கு முதன்மை விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும், சிறந்த நூல்களுக்கான இலக்கிய விருதுகளாக தலா ரூ.10 ஆயிரம், கேடயம், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உள்பட), சிறுகதை மொழி பெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சமூக சேவை, கவிதை, சிறந்த பத்திரிகையாளர் ஆகிய பிரிவுகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில், ஏதேனும்… Continue reading சிறந்த எழுத்தாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு!

சினிமா, புத்தக அறிமுகம், புத்தகம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!

குட்டிரேவதி இந்தப் புத்தகக்காட்சி(2014)க்கு வெளியாகியுள்ள பெண்களின் படைப்புகள் இவை. தற்கால இலக்கியப்படைப்பாக்கத்தில் பெண்களின் பங்கு அதிகமாவதை இது உறுதி செய்கிறது. பெரும்பாலான படைப்புகள் பெண்களின் முதல் நூலாகவும் அவை கவிதையாகவும் இருப்பது வியப்பைத் தருகிறது. 'போராட்ட வாழ்வியலாக' வந்துள்ள இரு நூல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே சமயம், நாவல், சிறுகதை, கவிதை, பயணநூல், கட்டுரைத்தொகுப்பு என வடிவங்களும் விரிந்துள்ளன. இங்கே, ஏதேனும் படைப்புகள் விடுபட்டிருந்தால் அது தற்செயலானதே. மன்னித்து, அந்தப்படைப்பையும் இங்கு பதிவு செய்ய நண்பர்கள் உதவினால்… Continue reading புத்தகக்காட்சியில் பெண் படைப்பாளிகளின் புத்தகங்கள்!

கவிதை, சினிமா

கவிஞர் வாலிக்கு கவிஞர் பா.விஜய் கவிதாஞ்சலி!

சமீபத்தில் மறைந்த கவிஞர் வாலிக்கு கவிஞர் பா.விஜய் கவிதாஞ்சலி இயற்றியுள்ளார்.