அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு!

ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திர சேகரன் தெரிவித்தார். ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார். முன்னதாக, ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிமன்ற வளாகத்தில் இருந்து செய்தி வெளியானது. அதற்கு, மதியம் 2.30க்குப் பின்னர் நடைபெற்ற வாதத் தொடர்ச்சியின்போது, அரசுத் தரப்பில் இருந்து… Continue reading ஜெயலலிதாவுக்கு ஜாமின் மறுப்பு!

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெ ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, நீதிமன்றம் தொடங்கியவுடன் அவசரம் கருதி இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு மறுத்த நீதிபதி சந்திரசேகர் வரிசைப்படிதான் மனுவை விசாரிக்க முடியும் என்றார். ஜெ ஜாமீன் மனு 73வது மனுவாக… Continue reading ஜெ ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதா ஜாமின் மனு: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமின் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. பகல் 12 மணியளவில் நீதிபதி சந்திரசேகர் முன், ஜாமின் மனு விசாரணைக்கு வருகிறது. அதனுடன் கீழ் நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் விசாரிக்கப்பட உள்ளன. ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியும் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பவானி சிங்கும் ஆஜராகின்றனர்.

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு:

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. ஜெயலலிதாவை விடுவிக்க எதிப்பது ஏன என விளக்கி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னகலா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். தசரா விடுமுறை முடிந்து வழக்கான அமர்வு இந்த மனு… Continue reading அரசு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பால் ஜெயலலிதா ஜாமீன் மனு மீண்டும் ஒத்துவைப்பு: