இலக்கியம், சினிமா, விருது

விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!

விளம்பரப் பட இயக்குநர்கள் ஜேடி-ஜெரி தந்தையர் ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை மூலமாக கடந்து ஐந்து வருடங்களாக இலக்கிய ஆளுமைகளுக்கு சாரல் இலக்கிய விருதை வழங்கிவருகின்றனர். எழுத்தாளர்கள் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன்,பிரபஞ்சன், வண்ணநிலவன்,வண்ணதாசன் ஆகியோர் இதுவரை இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். இந்த வருடம் கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. விருதுவிழாவில் எழுத்தாளர்கள் ஞானக்கூத்தன், யூமா வாசுகி, சுகுமாறன், இயக்குநர்கள் பாலா, கரு.பழனியப்பன், பத்திரிகை அதிபர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய ஞானக்கூத்தன், ''கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் கலகக்காரராக… Continue reading விக்ரமாதித்யன் எண்பதுகளின் கலகலக்காரர்!

கோலிவுட், சினிமா, சினிமா இசை

4 ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம்!

இரண்டு ஹீரோக்கள் சேர்ந்து நடித்த கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி போன்ற படங்கள் ரசிகர்களால் ஏற்கப்பட்டுள்ள நிலையில் 4 ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் ஜன்னல் ஓரம் படமும் நல்ல வரவேற்பைப் பெறும் என்கிறார் படத்தின் இயக்குநர் கரு. பழனியப்பன். இந்தப் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், ரமணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக பூர்ணா, மணிஷா யாதவ் நடித்திருக்கிறார்கள். இசை வித்யாசாகர். படம் வரும்வாரம் திரைக்கு வருகிறது.