எழுத்தாளர்கள், கரிப்பு மணிகள்

கரிப்பு மணிகள்-2

தொடர்கதை ராஜம் கிருஷ்ணன் 2 மருதாம்பா வாழ்க்கையின் மேடுபள்ளங்களுக்கிடையேயுள்ள முரண்பாடுகளைக் கண்டு தளர்ந்து விடமாட்டாள். குடிகாரத் தந்தையும் அடிபட்டுப் பட்டினி கிடந்து நோவும் நொம்பரமும் அனுபவித்த தாயையும் விட்டு ஒரு கிழவனுக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கைப்பட்டுப் பிழைக்க வந்த போதும், தனது இளமைக்கும்  எழிலுக்கும் வேறு கிளைகளில் பயன்களுண்டு  என்று அவள் வயிறு பிழைக்க வந்த களத்தில் உணர்த்தப்பட்டபோதும் அவள் விம்மி அழவில்லை; சுணங்கிச் சோர்ந்து விடவுமில்லை. அவர்களுக்கென்று வாழ்க்கையில் இலட்சியங்களோ, பற்றுக் கோடுகளோ எதுவுமில்லை. வாழ்க்கை என்பதே… Continue reading கரிப்பு மணிகள்-2

கரிப்பு மணிகள், தொடர்கதை, பெண், பெண் எழுத்தாளர்

கரிப்பு மணிகள்!

கரிப்பு மணிகள் ராஜம் கிருஷ்ணன் 1 இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களுமாகக் குழந்தைகள் குடும்பம். ‘தாலிக்கெட்டை’ப் பற்றிக் கவலைப்படாமல் வளர்ந்திருந்தாலும், தொழில் இத்தனை ஆண்டுகளில் அவர்களுடைய வண்மையை கூட்டியிருக்கவில்லை. உத்திராயனத்துச் சூரியன் உச்சிக்கு நகர்ந்து செங்கதிர்க் கொடை பிடிக்கிறான். தெற்குச் சீமையின் கடற்கரையோரங்களில் விரிந்து பரந்து கிடக்கும் உப்பளங்களில் இன்னோர் புத்தாண்டு துவக்கமாகி விட்டது. இட்ட தெய்வங்களின் மேலாடை களைந்து பரிமளதைலம் பூசி நீராட்டுவது போல் மண் அன்னையின் ‘அட்டு’ நீக்கி பதமான களியும் மணலும் விரவி… Continue reading கரிப்பு மணிகள்!

தொடர்கதை

ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்!

1978 ஆம் ஆண்டு ஜனவர் மாதம். அந்நாட்களில் நான் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலுமாக நீண்டிருக்கும் கடற்கரை ஊர்களில் உள்ள மீனவர் வாழ்க்கையை ஆராய்ந்து ஓர் புதினம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது, இலக்கியக் கூட்டமொன்றில் சிறந்த எழுத்தாளரும் திறனாய்வாளருமாகிய மதிப்பிற்குரிய நண்பர் திரு.சிட்டி(சுந்தரராஜன்) அவர்களைச் சந்தித்தேன். அவர் நான் தூத்துக்குடியில் தங்கியிருந்ததைப் பற்றிக் கேள்விப்பட்டு அன்புடன் விசாரித்தார். அத்துடன் ‘‘நீங்கள் தூத்துக்குடி பகுதியில் இன்னும் ஓர் களத்தை ஆராய்ந்து நாவல் எழுதவேண்டும். மனித வாழ்வுக்கு மட்டுமல்ல,… Continue reading ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள்!